’மூலத்தை விரட்டி ஆண்மையை பெருக்கும் அரு மருந்து’ துத்தி இலையின் அற்புத மருத்துவ பலன்கள்

Thuthi leaves; துத்திபூவை காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தாலும் ஆண்மை பெருகும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 17, 2023, 03:17 PM IST
  • துத்தி இலைக்குள் கொட்டி கிடக்கும் நன்மைகள்
  • ஆண்மை குறைப்பாட்டுக்கு நிவாரணம் கொடுக்கும்
  • மூலம் மற்றும் உடல் சூட்டு தணிக்கும் அற்புத ஆற்றல்
’மூலத்தை விரட்டி ஆண்மையை பெருக்கும் அரு மருந்து’ துத்தி இலையின் அற்புத மருத்துவ பலன்கள் title=

துத்தி இலையின் அற்புத பலன்கள்

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும், மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும், கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும், சிறுநீலைப் பெருக்கும். துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும், காமம் பெருக்கும், இருமலைக்குறைக்கும், ஆண்மையைப் பெருக்கும். குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

துத்தி இலை எங்கு கிடைக்கும்?

துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது. துத்தி 2 செமீ வரை உயரமானது. தாவரம் முழுவதும் மென்மையான உரோமங்கள் உண்டு. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். துத்தி இலைகளின் அடிப்பாகம் மெழுகு பூசியது போன்று காணப்படும். சில நேரங்களில் 3 மடல்களாகப் பிரிந்திருக்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக வளர்கின்றது. கடற்கரை ஓரங்கள், சமவெளிகளில் அடர்ந்து காணப்படும்.

துத்தி வகைகள்

துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு.

மூலத்துக்கு நிவாரணம்

மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும். துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும். துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.

வெள்ளைபடுதலுக்கு தீர்வு

வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்தக் காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது. 20 மி.லி. பூச்சாற்றுடன், சிறிதளவு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இரத்த வாந்தி கட்டுப்படும். 

உடல் சூடு ஓடிவிடும்

துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும். துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும். துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.

முகப்பரு வராது

முக பருக்கள் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது முகப்பருக்கள் ஏற்படுவதால் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது இப்படிப்பட்டவர்கள் துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.

மேலும் படிக்க | இரசாயன முறையில் பழுத்த மாம்பழங்களை அடையாளம் காண இதோ டிப்ஸ்

ஆண்மை குறைபாட்டுக்கு நிவாரணம்

ஆண்மை குறைபாடு தவறான உணவுப் பழக்கம், மலச்சிக்கல், நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் அதிகம் வெப்பமடைவது போன்ற காரணங்களால் இக்காலங்களில் ஆண்கள் பலருக்கு விந்து நீர்த்து போய், உயிரணுக்கள் குறைந்து குழந்தை பாக்கியம் ஏற்படாமல் போகிறது. இப்படிப்பட்ட ஆண்கள் துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அடர்த்தியாகும். முக்கியமான விஷயம், துத்திபூவை, காம்பு, மொக்குகளோடு சேர்த்து பறித்து அதை சிறிது கருப்பட்டி சேர்த்து கஷாயமாக்கி குடித்தாலும் ஆண்மை பெருகும்.

தோல் வியாதிகள் நீங்கும்

தோல் வியாதிகள் உடலின் சுகாதாரத்தில் முதன்மையாக வருவது நமது உடலில் மேற்போர்வையாக இருக்கும் தோல் சுகாதாரமாகவும், எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டால் பெரும்பாலான தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் தடுத்து விட முடியும். ஒரு சிலருக்கு கிருமித்தொற்று மற்றும் பிற காரணங்களால் படர்தாமரை, கருமேகம் போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இவர்கள் துத்தி விதைகளை பொடி செய்து 10 கிராம் அளவில் எடுத்து கொண்டு, 120 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்பட்ட கருமேகம், படர்தாமரை நீங்கும்.

வயிற்றுப்போக்கு குணமாகும்

அஜீரணம், வயிற்று போக்கு சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறியாகும். ஆனால் ஒரு சிலர் நேரம் தவறி உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும். 

சிறுநீர் பிரச்சனை இருக்காது

சிறுநீர் பிரிய நமது உடலில் இதயத்தை போல முக்கியமான உறுப்புகளாக இரண்டு சிறுநீரகங்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சரியான இடைவெளியில் சிறுநீர் நன்றாக கழிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு சிலர் தண்ணீர் குறைவாக அருந்துவதாலும், அதீத உடல் வெப்பத்தாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகிறது. சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் எதிர்காலங்களில் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது. 

மலச்சிக்கல் நிவாரணம்

மலச்சிக்கல் மாமிசம், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சரியான அளவில் தண்ணீரும் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். அவசர யுகமான இன்றைய நாட்களில் பலருக்கும் மலம் கழிக்கக் கூட நேரமில்லாத காரணத்தால் நாளடைவில் மலச்சிக்கல் குறைபாடு உண்டாகிறது. இத்தகைய நபர்கள் துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.

மேலும் படிக்க | இளமையில் தோன்றும் நரை முடியை சரிசெய்ய இந்த 4 பொருட்களை சாப்பிடுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News