Beauty Tips: இந்த பிரச்சனையை போக்க ஒரு முட்டை போதும், இப்படி செய்து பாருங்கள்

தூசி, மண், மாசுபாடு ஆகியவற்றாலும், சருமத்தை ஒழுங்காக கவனித்துக்கொள்ளாததாலும் பிளாக்ஹெட்ஸ் பிரச்சினை உருவாகிறது. ஆனால், இதை எளிதாக வீட்டிலேயே சரி செய்யலாம். 

Last Updated : Jul 3, 2021, 06:34 PM IST
  • பிளாக்ஹெட்ஸ் பிரச்சினையை எளிதாக வீட்டிலேயே சரி செய்யலாம்.
  • பிளாக்ஹெட்ஸை அகற்ற, நீங்கள் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • பிளாக்ஹெட்ஸை நீக்க முட்டை மற்றும் சர்க்கரையின் கலவை உதவும்.
Beauty Tips: இந்த பிரச்சனையை போக்க ஒரு முட்டை போதும், இப்படி செய்து பாருங்கள் title=

அழகான மற்றும் கவர்ச்சியான முகம் வேண்டும் என்பது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களின் விருப்பமாகவும் உள்ளது. ஆண்களும் தங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். 

தூசி, மண், மாசுபாடு ஆகியவற்றாலும், சருமத்தை ஒழுங்காக கவனித்துக்கொள்ளாததாலும் பிளாக்ஹெட்ஸ் பிரச்சினை உருவாகிறது. ஆனால், இதை எளிதாக வீட்டிலேயே சரி செய்யலாம். 

பிளாக்ஹெட்ஸ் முகத்தில் புள்ளிகள் மற்றும் அடையாளங்களை ஏற்படுத்தும். ஆனால் ஒரே ஒரு முட்டையின் (Eggs) உதவியால் பிளாக்ஹெட்ஸின் சிக்கலை நீக்கலாம். அதை எப்போது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

பிளாக்ஹெட்ஸை அகற்ற முட்டையின் பயன்பாடு: 

பிளாக்ஹெட்ஸை அகற்ற, நீங்கள் முட்டையின் வெள்ளை பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலையிலும், பிற்பகலிலும், மாலையிலும் எந்த நேரத்திலும் பிளாக்ஹெட்ஸை அகற்றுவதற்கான இந்த செயல்முறையை நீங்கள் செய்யல்லாம். 

பிளாக்ஹெட்ஸை அகற்றுவதற்கான உதவிக்குறிப்புகள்: முட்டை மற்றும் பேக்கிங் சோடா

இதற்கு, நீங்கள் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து ஒரு பேஸ்ட்டாக செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் (Face) நன்கு தடவி 5 நிமிடங்கள் கைகளால் லேசாக மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் இப்படி செய்த பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

ALSO READ: Health news: முட்டை உங்கள் நண்பனா எதிரியா? அது உங்கள் கையில் உள்ளது!!

பிளாக்ஹெட்ஸ் அகற்றும் கிரீம்: தேன் மற்றும் முட்டை

முட்டையின் வெள்ளைக்கரு கொண்டு பேஸ்ட் தயாரிக்கும் அளவிற்கு அதில் தேனை (Honey) கலக்க வேண்டும். இப்போது ஒரு பிரஷ்ஷின் உதவியுடன், இந்த பேஸ்டின் இரண்டு மூன்று லேயர்களை முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். பிளாக்ஹெட்ஸை அகற்ற இந்த முறையை நீங்கள் தினமும் பயன்படுத்தலாம். 

பிளாக்ஹெட்ஸ் அகற்றும் தீர்வு: முட்டை மற்றும் ஓட்மீல்

முட்டையின் வெள்ளைக்கரு 2 டீஸ்பூன் மற்றும் ஓட்மீல் 2 தேக்கரண்டி கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். வட்ட இயக்கத்தில் இந்த பேஸ்ட் கொண்டு முகத்தை மசாஜ் செய்யவும். 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி உலர வைக்கவும்.

பிளாக்ஹெட்ஸை நீக்க: முட்டை மற்றும் சர்க்கரை

1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 முட்டைகளின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். மசாஜ் செய்த பிறகு, முகத்தை 10 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.

குறிப்பு- தோலில் எதையும் பயன்படுத்துவதற்கு முன், பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இது கல்வியின் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: Eggs on Brain Health: முட்டையின் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News