கொரோனா பரவலால் உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார ரீதியில் அடி வாங்கியிருக்கும் நிலையில், இந்த நாடு பில்லியன் கணக்கான பணத்தை வீணடிக்கிறது.
2.7 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (personal protective equipment) வீணடிக்கப்படும் என்று இந்த நாட்டின் அரசே ஒப்புக் கொள்வது அதிர்ச்சியை அதிகரிக்கிறது.
சுமார் ஐந்து பில்லியன் PPE உபகரணங்கள் பொருட்கள் வீணாகிவிடும் என்று இங்கிலாந்து அரசாங்கம் வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது.
இந்த தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இனி தேவைப்படாது அல்லது தேசியசுகாதார சேவையின் (National Health Service (NHS)) ஊழியர்களைப் பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதாக பிரிட்டன் அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.
ALSO READ | சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்!
இந்த பாதுகாப்பு உபகரணங்களில் பெருமளவு பணம் சிக்கியிருப்பது அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் ஒன்றில், சுகாதார அமைச்சர் எட்வர்ட் ஆர்கர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
கோவிட் தொற்றுநோய்களின் போது பொது நிதியைப் பயன்படுத்துவதில் "பிரம்மாண்டமான அளவில் அலட்சியம்" காட்டப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் அரசை விமர்சிக்கின்றனர்.
பிரெக்ஸிட்டால் ஒரே மாதத்தில் 12 பில்லியன் பவுண்டுகள் வர்த்தக இழப்பு ஏற்பட்டது. £2.7bn மதிப்புள்ள PPE உபகரணங்கள் வீணாக்கப்படுகின்றன.
ALSO READ | அமெரிக்காவை புரட்டிப் போடும் பனிப்புயல்; நியூயார்க்கில் அவசர நிலை அறிவிப்பு!
ஆனால் எரிபொருளின் மீதான வாட் வரியைக் குறைக்கவோ, தேசியக் காப்பீட்டு உயர்வைக் குறைக்கவோ அல்லது ஏழைகள் வாரத்திற்கு £20 வைத்திருக்க அனுமதிக்கவோ, அரசிடம்பணம் இல்லை என்று மக்கள் கருதுகின்றனர்.
Staggering hit to Govt accounts relating to PPE waste & eye-watering prices paid at start of pandemic...
- of stock 'unsuitable for any use'
- unsuitable for NHS use and may have to be donated
- price write-downs
- stock set to expire pic.twitter.com/Jf1CbVixrN
— Lawrence Dunhill (@LawrenceDunhill) January 31, 2022
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் பெருமளவு பணம் சிக்கியிருப்பது அரசாங்கத்தின் மீதான விமர்சனத்திற்கு வழிவகுத்தது.
லிபரல் டெமாக்ராட் கட்சியின் (Liberal Democrats’ chief whip) தலைமைக் கொறடாவும் வடகிழக்கு ஃபைஃபின் எம்.பி.யுமான வெண்டி சேம்பர்லைன் முன்வைத்த கேள்விக்கு, எவ்வளவு PPE வாங்கப்பட்டது மற்றும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து அமைச்சர் பதிலளித்தபோது இந்தத் தகவல் வெளியானது.
மார்ச் 2020 இல் தொற்றுநோய் தாக்கியதில் இருந்து அரசாங்கத்தின் பிபிஇ திட்டத்தின் கீழ், 36.4 பில்லியனுக்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டது.
ALSO READ | புத்தாண்டு தினத்தில் ஆன்லைனில் 33,000 ஆணுறைகள் ஆர்டர்!
இதில், தோராயமாக 3.4 பில்லியன் யூனிட்கள் தற்போது அதிகப்படியாக இருக்கிறது. அந்த பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை 2.2 பில்லியன் பவுண்டுகள்” என்று சுகாதார அமைச்சர் எட்வர்ட் ஆர்கர் தெரிவித்தார்.
இதில் 1.2 பில்லியன் பொருட்கள் பயன்படுத்தத் தகுதியற்றவை எனக் கருதப்படுகின்றன. இந்த பொருட்களின் கொள்முதல் விலை 458 மில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
458 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பொருட்களை சில மாதங்களில் வீணடிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வீணடிப்பதன் மூலம் அரசாங்கம் வரி செலுத்துவோருக்கு துரோகம் செய்வதாக மக்கள் கொந்தளிக்கின்றனர்.
ALSO READ | கனடாவில் அதிகரிக்கும் பதற்றம்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR