அதிகாலையில் நாம் உட்கொள்ளும் நாளின் முதல் உணவு, அதாவது காலை சிற்றுண்டி நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமாகும். காலை எழுந்தவுடன் அதிக நேரம் வெறும் வயிற்றுடன் இருந்தால் பல பிரச்சனைகள் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகிறார்கள்.
காலை வேளையில் வயிறு காலியாக இருந்தால், பல வகையான நோய்கள் நம்மைத் தாக்க துவங்கிவிடுகின்றன. காலையில் வெறும் வயிற்றில் இருப்பதால், பலருக்கு அசிடிட்டி, வயிற்று வலி, வாந்தி மற்றும் ரத்தத்தில் சீரற்ற சர்க்கரை அளவு போன்ற பிரச்சனைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பலர் தங்கள் பசியைத் தணிக்க காலையில் தேவையற்ற பல உணவுகளை சாப்பிடுகிறார்கள். இது பல சிக்கல்களை ஏற்படுத்தும். ஆகையால், வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாதவை எவை என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
வெறும் வயிற்றில் மது அருந்த வேண்டாம்
காலையில் வெறும் வயிற்றில் மது அருந்தினால், உடல்நிலை மோசமடையக்கூடும். வெறும் வயிற்றில் மது அருந்தினால், மது உடலின் இரத்த ஓட்டத்தில் செல்கிறது என்று நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மது உடல் முழுவதும் பரவி, அதன் காரணமாக, இரத்த நாளங்கள் விரிகின்றன. இதன் காரணமாக நமது நாடித் துடிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்றவற்றில் பிரச்சனைகள் வரலாம். எனவே வெறும் வயிற்றில் மது அருந்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
வெறும் வயிற்றில் காபி வேண்டாம்
காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பெரும்பாலானோர் காபி குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல. வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடித்தால், அசிடிட்டி பிரச்சனை வரலாம்.
மேலும் படிக்க | நரம்புகளை முறுக்கேற்றும் வாழைப்பழம் - சாப்பிடும் மந்திரம்
வெறும் வயிற்றில் சூயிங்கம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
பெரும்பாலான மக்கள் வெறும் வயிற்றில் சூயிங்கம் மெல்லுவார்கள். அப்படிப்பட்டவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், உடனடியாக சூயிங்கம் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் வெறும் வயிற்றில் சூயிங்கம் மெல்லுவதால், செரிமான அமிலம் நம் வயிற்றில் உருவாகத் தொடங்குகிறது. இந்த செரிமான அமிலங்கள் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை முதல் அல்சர் வரை பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே வெறும் வயிற்றில் சூயிங்கம் மெல்லாமல் இருப்பது நல்லது.
வினோதம் ஆனால் உண்மை!!
வெறும் வயிற்றில் ஷாப்பிங்க் செய்தால் ஆபத்து!! ஆம், வெறும் வயிற்றில் ஷாப்பிங் செய்யக்கூடாது. ஊடக அறிக்கைகளின்படி, வெறும் வயிற்றில் இருப்பது நம்மை அதிக பொருட்களை வாங்க வைக்கிறது. எனவே வெறும் வயிற்றில் ஷாப்பிங் செல்ல வேண்டாம். இது உங்கள் மணி பர்சுக்கும் ஏற்றதாக இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த செய்திகளுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இப்படி 5 விதமாக நீரை குடித்தால் போதும்: சட்டென்று குறையும் உடல் எடை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR