தொப்புளில் சில துளி எண்ணெயை விட்டு தேய்த்துவிடுவதால் கிடைக்கும் அளவு கடந்த பலன்கள் ஆகும். தொப்புளில் எண்ணெய் தடவுவது மிகவும் பழமையானதாக இருந்தாலும், நல்ல பலன் கொடுக்கும் நடைமுறையாகும். இந்த பழக்கம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்துகிறது. தொப்புளில் தடவும் எண்ணெய்கள் எதுவாக இருந்தாலும் சரி அது பயனளிக்கும். ஆனால் பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம் சருமத்திற்கு நன்மை ஏற்படும் என்பது தெரியுமா? மகத்தான நன்மைகளைக் கொடுக்கும் இந்த தொப்புள் எண்ணெய் மசாஜ் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
பாதாம் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டுமே ஆரோக்கியத்தையும் சருமத்தையும் பாதுக்காப்பவை. பாதாம் சாப்பிடுவது நம் உடலுக்கு நன்மை பயக்கும் அதே வழியில் பாதாம் எண்ணெய் பல பிரச்சனைகளை தீர்க்கும். குறிப்பாக பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவது மிகவும் பலன் தரும் (Almond Oil In Navel Benefits). பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவினால் பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
தொப்புளில் பாதாம் எண்ணெய் தடவினால் ஏற்படும் நன்மைகள்
தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவியல் உண்மை இல்லை என்றாலும், தொப்புளில் எண்ணெய் தடவுவது இந்திய பாரம்பரியத்தில் மிகவும் பழமையான வீட்டு வைத்திய முறையாகும், பாரம்பரிய வீட்டு வைத்தியத்திற்கு தனிச் சிறப்பு உள்ளது.
மேலும் படிக்க | பைல்ஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளுக்கு 'நோ' சொல்லிடுங்க
தொப்புள் நமது உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் இணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பழங்காலத்திலிருந்தே தொப்புளில் எண்ணெய் பூசும் பாரம்பரியம் உள்ளது. அதன் நேரடி விளைவு உடலின் ஒவ்வொரு பகுதியிலும் எதிரொலிக்கும். பாதாம் எண்ணெயை தொப்புளில் பூசுவதால் முக்கியமான மூன்று நன்மைகள் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும்.
வெடித்த உதடுகளை குணப்படுத்தும்
பாதாம் எண்ணெய் உதடு வெடிப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தினமும் பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவினால், உங்கள் வெடிப்புள்ள உதடுகள் மென்மையாகும். இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
சருமத்தை பொலிவாக்கும்
தொப்புளில் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமத்தின் நிறமும் மேம்படும். பாதாம் எண்ணெயில் ஏராளமான வைட்டமின் ஈ உள்ளது, இது சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த 3 மூன்று தவறுகளை மட்டும் பண்ணாதிங்க!
வறட்சியை போக்கும் பாதாம் எண்ணெய்
தோல் மிகவும் வறண்டு காணப்படுபவர்களும் பாதாம் எண்ணெய் நல்ல பலன் தரும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். பாதாம் எண்ணெய் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.
தொப்புளில் பாதாம் எண்ணெய் தடவுவது எப்படி?
தொப்புளில் பயன்படுத்தும் பாதாம் எண்ணெய் சுத்தமானதாக இருக்க வேண்டும். முதலில், 5-10 சொட்டு பாதாம் எண்ணெயை உள்ளங்கையில் எடுத்து, அதை விரல்களால் தொப்புளில் தடவி, லேசாக வட்டமாக தேய்க்கவும். தினமும் 5 நிமிடம் இந்த தொப்புள் மசாஜ் உங்கள் சருமத்திற்கு அதிகபட்ச நன்மையை தரும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Diabetic Cure: சர்க்கரை நோய்க்கு வரப்பிரசாதமாகும் சஞ்சீவனி ‘இலைகள்’
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ