உண்மையில் க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

கிரீன் டீ-யில் எபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Oct 11, 2022, 11:12 AM IST
  • க்ரீன் டீ உடல் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி ஏரளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
  • க்ரீன் டீ குடிப்பதால் உங்கள் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்கலாம்.
  • பலர் உடற்பயிற்சி செய்த பிறகு க்ரீன் டீயை குடிக்கின்றனர்.
உண்மையில் க்ரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா? title=

உடல் எடையை குறைக்க உதவும் சிறந்த பானங்களில் க்ரீன் டீ தான் முக்கியமானது, உடல் எடை குறைப்பில் இந்த தேநீர் மிகவும் உதவிகரமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.  க்ரீன் டீ உடல் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி இதில் ஏரளமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்சிடண்டுகளும் நிரம்பியுள்ளன.  நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கிரீன் டீ குடிப்பவர்கள் 3.3 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  உடல் எடையை குறைக்க குறைந்த கலோரி கொண்ட அதேசமயம் ஆரோக்கியமான பானம் என்று வருகையில் அதில் க்ரீன் டீ தான் முதலிடம் வகிக்கிறது.  க்ரீன் டீ குடிப்பதால் உங்கள் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்கலாம் மற்றும் கிரீன் டீயில் உள்ள கலவைகள் கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களைத் தூண்டும், மேலும் சிறந்த பலனைப் பெற பலர் உடற்பயிற்சி செய்த பிறகு க்ரீன் டீயை குடிக்கின்றனர். 

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

உடற்பயிற்சிக்குப் பிறகு உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியமான ஒன்று, பலரும் உடற்பயிற்சி செய்த பிறகு புரோட்டீன் ஷேக்குகளை குடிக்க விரும்புகிறார்கள், ஆனால் கிரீன் டீ அதற்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.  கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.  உடற்பயிற்சிக்குப் பிறகு ஒரு நல்ல பானமாகவும் கருதப்படுகிறது, இது உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கும்.  ஃபிட்னெஸ் உணர்வுள்ளவர்கள் பொதுவாக அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவின் அளவு பற்றி விழிப்புடன் இருப்பார்கள், அதில் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ சிறந்த தேர்வாக இருக்கும்.  மேலும் இது உடற்பயிற்சியால் உருவாகும் வீக்கம் மற்றும் தசை வலியை போக்கவும் உதவுகிறது.

க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்கிற ஆன்டி ஆக்சிடண்டுகள் காணப்படுகிறது, இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.  அதேசமயம் தூங்கும் நேரத்தில் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கலாம், இதிலுள்ள காஃபின் தூக்கத்தை கெடுத்துவிடும்.  வெறும் வயிற்றில் க்ரீ டீ குடிப்பதால் இரைப்பை பிரச்சனைகள் ஏற்படும், ஏதேனும் மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு அதைக் குடிப்பதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News