Vitamin C Foods: ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும் வைட்டமின் சி உணவுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் கனிமங்களும் தேவைப்படுகிறது. விட்டமின் சி நமது உடலின் வலுவுக்கு மெருகூட்டுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2022, 02:53 PM IST
  • நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் வைட்டமின் சி
  • அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது வைட்டமின் சி
  • அதிகப்படியான வைட்டமின் சி சத்து, சிறுநீரில் வெளியேறிவிடும்
Vitamin C Foods: ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும் வைட்டமின் சி உணவுகள் title=

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் கனிமங்களும் தேவைப்படுகிறது. விட்டமின் சி நமது உடலின் வலுவுக்கு மெருகூட்டுகிறது.

வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும், இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கிறது. குறைந்த அளவு வைட்டமின் சி நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும்.

அஸ்கார்பிக் அமிலம் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் சி, உடலின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி, நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

நாம் ஒரு நாளில் தேவைக்கு அதிகமாக விட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் (Nutritious Food), மனித உடல் வைட்டமின் சி என்னும் ஊட்டச்சத்தை சேமித்து வைக்காது.

fruits

எனவே தினசரி தேவைக்கான வைட்டமின் சி சத்தை, ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவில் இருந்து தான் பெறவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்து, சிறுநீரில் வெளியேறிவிடும்

வைட்டமின் சி இல்லாமல், நமது உடலால் கொலாஜனை உருவாக்க முடியாது, மனித உடலில் உயிர் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் ஒரு முக்கியமான புரதம் கொலாஜன் ஆகும். 

நமது மூட்டுகள், எலும்புகள், தசைகள் மற்றும் தசைநாண்கள் ஆகியவற்றிற்கு இன்றியமையாத கொலாஜன், எலாஸ்டின் பொருட்களுடன் இணைந்து செயல்படுகிறது.

ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்

சரும பராமைப்பு இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பு, செரிமான அமைப்பை ஒழுங்குபடுத்துதல், எலும்புகளை வலுப்படுத்துவது என பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது கொலாஜன். 

ஆரஞ்சு, எலும்பிச்சை, பப்ளிமாஸ் மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் இது அதிகமாக தொடருகிறது ஸ்ட்ராபேரி, கூஸ்பேரி, ப்லுபேரி, ராசப்பேரி, அண்ட் கிரான்பெரி முலாம்பழம், தர்பூசணி போன்ற பழக்களில் விட்டமின் சி அதிகம் உள்ளது.

அதேபோல வேகவைத்த உருளைக்கிழங்கு, வெள்ளரி உட்பட பல காய்கறிகளிலும் விட்டமின் சி நிரம்பியுள்ளது.

ALSO READ | Health Tips: கொத்தரவரங்காயை சாதாரணமாக எடை போட வேண்டாம், வியக்கத்தக்க நன்மைகள் உள்ளன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News