Best hairoil: கருமையான அடர்த்தியான கூந்தலுக்கு கேரண்டி சொல்லும் எண்ணெய் என்ன எண்ணை?

நீளமான, கருமை மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமானால் இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள், பளபளப்பும் மீண்டும் வரும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2022, 10:16 AM IST
  • கருமையான அடர்த்தியான கூந்தலுக்கு கேரண்டி எண்ணெய்
  • அதிக பசைத்தன்மை கொண்ட எண்ணெய்
  • உடலுக்கு குளிர்ச்சி தரும் எண்ணெய்
Best hairoil: கருமையான அடர்த்தியான கூந்தலுக்கு கேரண்டி சொல்லும் எண்ணெய் என்ன எண்ணை? title=

புதுடெல்லி: முடி உதிரும் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். விளக்கெண்ணெயின் நன்மைகளை தெரிந்துக் கொண்டால் சுலபமாக பிரச்சனையை தீர்க்கலாம்.

ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் அடர்த்தியானது. மிகவும் அடர்த்தியாக இருப்பதால் அதிக பசைத்தன்மையைக் கொண்டது. 

பொதுவாக தலைமுடிக்கு விளக்கெண்ணெயை யாரும் பயன்படுத்துவதில்லை, ஆனால் கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த எண்ணெயில் உள்ளன.

health

இது முடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும் விளக்கெண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. சேதமடைந்த முடியை சரியாக்கி பொடுகை நீக்கும் விளக்கெண்ணெயின் சிறப்புகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க | விளக்கெண்ணெய் என்னும் ஆமணக்கு எண்ணெயின் அற்புத சக்தி

ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது, இது விரைவான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. முடி வளராதவர்கள், முடி வறண்டு கணப்படுபவர்கள் மற்றும் இளநரை அதிகம் கொண்டவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்மை பெறலாம். 
விளக்கெண்ணெயின் 4 நன்மைகள்

முடியை நீளமாக்கும்
விளக்கெண்ணெயை தொடர்ந்து மசாஜ் செய்வதால் முடி வேகமாக வளருவதோடு வலுவடையும். முடி வளர்ச்சிக்கு, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

முடியை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது
விளக்கெண்ணை என்னும் ஆமணக்கு எண்ணெய் ஒரு சிறந்த கண்டிஷனர். கற்றாழை ஜெல், எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து முடியின் வேர்களில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவவும். இது முடியை வலுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.

health

முடியை வலுவாக்கும்
ஆமணக்கு எண்ணெய் முடியை பலப்படுத்துகிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால், முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி, முடி வேகமாக வளரும்.

தேங்காய் எண்ணெயுடன் கலந்து விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். இந்த கலவை எண்ணெயை ஒன்று தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் வரை தலைமுடியில் ஊற விடவும், அதன் பிறகு தலையை கழுவவும்.

பளபளக்கும் கூந்தல்
விளக்கெண்ணெய் முடிக்கு பொலிவைத் தருகிறது. தலைச்சாயம் அதிகமாக பயன்படுத்துவதும், பல்வேறு ரசாயனங்களை கூந்தலில் போடுவதாலும், முடியின் பளபளப்பு மறைந்துவிடும்.

அத்தகைய சூழ்நிலையில், விளக்கெண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். இதனை தொடர்ந்து முடியில் தடவி வர வேண்டும். இது கூந்தலுக்கு கேடயமாக செயல்பட்டு ரசாயனப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்கிறது.

மேலும் படிக்க | பிசைந்து வைத்த சாப்பாத்தி மாவை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவது சரியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News