பொடுகுத்தொல்லையா? கவலை வேண்டாம், எளிதான வீட்டு வைத்தியம் இதோ

Almond oil For Hair: பெரும்பாலான மக்கள் பொடுகு பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக முடியின் வேர்கள் பலவீனமடைகின்றன. பாதாம் எண்ணெய் இதற்கு ஒரு சஞ்சீவியாக உதவும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2022, 07:01 PM IST
  • உங்களுக்கு பொடுகு இருக்கிறதா?
  • பாதாம் எண்ணெய் உதவியாக இருக்கும்.
  • எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பயன்படுத்தலாம்.
பொடுகுத்தொல்லையா? கவலை வேண்டாம், எளிதான வீட்டு வைத்தியம் இதோ title=

கூந்தல் உதிரும் பிரச்சனையும், பொடுகு பிரச்சனையும் இந்நாட்களில் அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாக உள்ளது. பொடுகு பிரச்சனையை பல இயற்கையான வழிகளின் மூலம் சரி செய்யலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

பாதாம் எண்ணெய் முடி மற்றும் வேர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஈ, புரோட்டீன் மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால் இதன் மூலம் முடி பளபளப்பாக மாறும். 

பாதாம் எண்ணெயைக் கொண்டு கூந்தலில் மசாஜ் செய்தால், பொடுகு போன்ற முடி பிரச்சனைகள் நீங்கும். ஆனால், பாதாம் எண்ணெயில் சில பொருட்களைக் கலந்து தடவினால், கூந்தலுக்கு கூடுதல் நன்மைகளும் பளபளப்பும் கிடைக்கும். 

இந்த 2 பொருட்களை பாதாம் எண்ணெயில் கலக்கவும்

1.எலுமிச்சை சாறு

பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து பயன்படுத்த்னால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடலாம். 

ஒரு பாத்திரத்தில் சில துளிகள் பாதாம் எண்ணெய் மற்றும் சில துளிகள் எலுமிச்சை எண்ணெய் கலந்து உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். பின்னர் கைகளால் முடியை லேசாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்த பிறகு, உங்கள் தலைமுடியை 1 மணி நேரம் அப்படியே விட்டு பின்னர், ஷாம்பு போட்டு கழுவலாம்.

மேலும் படிக்க | முடி உதிரும் பிரச்சனையா? இவை காரணமாக இருக்கலாம், இக்னோர் பண்ணாதீங்க
அல்லது, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையிலும் முடியை கழுவலாம். இப்படி செய்வதன் மூலம் முடி வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.

2. தேனின் பயன்பாடு

பாதாம் எண்ணெய், தேன் மற்றும் வாழைப்பழத்தின் கலவையும் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும். இந்த மூன்றையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்து, அந்த கலவையை முடியில் தடவவும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூ கொண்டு உங்கள் தலைமுடியை நன்கு கழுவவும். இப்படி செய்வதன் மூலம் கூந்தல் அழகாக மாறுவது மட்டுமின்றி, கூந்தல் பளபளப்பாகவும் இருக்கும், பொடுகுத்  தொல்லைக்கும் நிவாரணம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கோடை காலத்தில் முகப்பொலிவை பாதுகாக்கணுமா? மிக எளிய வழி இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News