மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மேலும் இரத்தச் சர்க்கரைக் குறைவு பிரச்சனையால் அவதிப்படும் பலர் மருந்துகளை உட்கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் பீனட் பட்டர் சாப்பிட வேண்டும் என்று பலர் பரிந்துரைக்கின்றனர், அதே சமயம் சிலர் இதை சாப்பிடக்கூடாது என்று கூருகின்றனர். எனவே சர்க்கரை நோயாளிகள் பீனட் பட்டரை சாப்பிடலாமா கூடாதா என்பதை இங்கே காண்போம்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கும் இந்த பானத்தை தினமும் குடிக்கவும்
சர்க்கரை நோயாளிகள் பீனட் பட்டர் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் பீனட் பட்டர் சாப்பிடலாம் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. இதை சாப்பிடுவது அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது, ஆனால் நீங்கள் அதை அதிகமாக சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பீனட் பட்டரை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். உண்மையில், பீனட் பட்டரில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் நோயாளிகள் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே பீனட் பட்டரை உட்கொள்ள வேண்டும்.
பீனட் பட்டரின் நன்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்
* இது இதயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில்,பி-கூமரிக் என்ற அமிலம் இதில் காணப்படுகிறது, இது இதயம் தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறிவதில் நன்மை பயக்கும்.
* இதனுடன், பீனட் பட்டர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வகை-2 நீரிழிவு நோயின் அபாயத்தை 30 சதவீதம் வரை குறைக்கும் என நம்பப்படுகிறது.
* இதனுடன், உங்கள் உடலுக்கு இரும்பு மற்றும் கால்சியத்தை வழங்குவதில் பீனட் பட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஹோம் மேட் பீனட் பட்டர் ரெசிபி
வேர்க்கடலை – 1.5 கப்
கடலை எண்ணெய் – 2 டேபில் ஸ்பூன்
தேன் – 2 டேபில் ஸ்பூன்
உப்பு – ¼ ஸ்பூன்
* வேர்க்கடலையை வெறும் வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் நன்றாக வறுக்கவும்.
* வேர்க்கடலை சூடாக இருக்கும்பொழுதே டவலால் நன்றாக உரசி தோலை அகற்றவும்.
* அதனை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராகும் வரை நன்றாக அரைக்கவும்.
* மிக்ஸியை மேலும் ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து அரைக்கவும். நிறுத்தி கலவையை ஒதுக்கவும். இப்பொழுது பட்டர் ஓரளவு ரெடியாகி இருக்கும்.
* பின்னர் இப்பொழுது கலவை பட்டர் பதத்திற்கு வந்ததும் அதில் எண்ணெய் ,உப்பு மற்றும் தேனை சேர்க்கவும்.
* மேலும் 1 முதல் 2 நிமிடத்திற்கு பட்டர் பதத்திற்கு வரும் வரை அரைக்கவும். இப்பொழுது பீனட் பட்டர் ரெசிபி ரெடி.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முகத்தில் உள்ள முடிகளை நிரந்தரமாக நீக்கும் இயற்கையான வழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR