கெஞ்சி கேட்டாலும் எடை குறையலயா? இஞ்சிய இப்படி சாப்பிடுங்க... பருமன் அஞ்சி ஓடிடும்

Ginger For Weight Loss: உடல் எடையைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 11, 2023, 12:55 PM IST
  • இஞ்சி சாறு குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம்.
  • இந்த சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கலாம்.
  • மேலும் உடலுக்கு நீர்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இது அளிக்கிறது.
கெஞ்சி கேட்டாலும் எடை குறையலயா? இஞ்சிய இப்படி சாப்பிடுங்க... பருமன் அஞ்சி ஓடிடும் title=

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவுமுறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையைக் குறைக்க, உணவில் சிறு மாற்றங்களைச் செய்வது மிகவும் அவசியம். சிலருக்கு அதிக நார்ச்சத்து மற்றும் புரதத்தை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. சிலருக்கு அவற்றை தவிர்க்குமாறும் கூறப்படுகின்றது. ஆனால், பொதுவாக அனைவரும் எடை அதிகரிக்கும் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. சிலவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது. 

இஞ்சி

இஞ்சி நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தும் ஒரு உணவு வகையாகும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை தேநீர் முதல் சட்னி, தொக்கு, ரசம், துவையல் என பல வகை உணவுகளை சமைக்க பயன்படுத்துகிறோம். சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டாலும், இஞ்சி நீர், இஞ்சி போட்ட கஷாயம் உட்கொள்கிறோம். 

ஆனால், உடல் எடையைக் குறைப்பதிலும் இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் நல்ல விளைவைக் காட்டுகின்றன. இஞ்சியை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது, பசியைக் குறைக்கிறது மற்றும் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது. எடை இழப்புக்கு இஞ்சியை எந்தெந்த வழிகளில் உட்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

எடை இழப்புக்கு இஞ்சி

எடை இழப்புக்கு இஞ்சியை பல வழிகளில் உட்கொள்ளலாம். கொழுப்பை விரைவாக எரிப்பதில் விளைவைக் காட்டும் இஞ்சியின் அத்தகைய சில சேர்க்கைகள் பற்றி இங்கே காணலாம். 

மேலும் படிக்க | 30 வயதில் இளநரையால் தொல்லையா? முடி கருப்பாக இந்த வைத்தியத்தை செய்யுங்கள்

இஞ்சி மற்றும் எலுமிச்சை

எலுமிச்சையுடன் இஞ்சியை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், இதனால் தேவையற்ற பசி குறைந்து எடை குறையத் தொடங்குகிறது. முதலில் ஒரு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும். இந்த தேநீரை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிக்கவும். எடை இழப்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். 

இஞ்சி சாறு

இஞ்சி சாறு குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். இந்த சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கலாம். மேலும் உடலுக்கு நீர்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இது அளிக்கிறது. இருப்பினும், நீங்கள் நாள் முழுவதும் அதிகப்படியான இஞ்சி சாறு குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் அளவு குறித்து கவனம் செலுத்துவது முக்கியம்.

இஞ்சி மற்றும் பச்சை தேயிலை

கிரீன் டீ எடை இழப்புக்கு நல்லது என்று கருதப்படுகிறது. கிரீன் டீ மற்றும் இஞ்சியை ஒன்றாக உட்கொண்டால், எடையில் விரைவான விளைவைக் காணலாம். இதற்கு க்ரீன் டீ தயாரித்து அதில் சில இஞ்சி துண்டுகளை கலக்கவும். இந்த டீயை காலையிலும் மாலையிலும் குடிப்பது நல்ல பலனைத் தரும்.

இஞ்சி மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர்

இஞ்சி சாறுடன் ஆப்பிள் வினிகரை குடிப்பதும் நன்மை பயக்கும். இந்த சாறு உடலில் புரோபயாடிக் விளைவைக் கொண்டுள்ளது. இஞ்சி மூலிகை தேநீர் தயாரித்து அதில் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடிக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மலச்சிக்கலை தீர்த்து... குடல் நச்சுகளை நீக்கும் சில மஞ்சள் நிற உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News