கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 85,362 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1089 நோயாளிகள் இறந்தனர்
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தற்போது 93 ஆயிரம் 379 நோயாளிகள் இறந்துள்ளனர் என்றும் நாட்டில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 9,60, 969 என உள்ளதாகவும், 48,49,584 பேர் குணமாகியுள்ளனர் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணமடையும் விகிதமும் அதிகமாக உள்ளது. நோயாளிகள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் 362 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த ஒரு நாளில் 1089 பேர் இறந்தனர். நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 59,3,932 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 13,41,535 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் (ICMR) கூறியுள்ளது. இதுவரை 7,02,69,975 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மூலம் நோயாளிகள் எளிதாக கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை கிடைத்து விரைவில் குணமாகி விடுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
ALSO READ | Covid-19 தடுப்பூசி முன் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 2 மில்லியனை எட்டும்: WHO
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR