புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.47 கோடியாக உயர்ந்துவிட்டது.
சர்வதேசங்களையும் ஆட்டிவைத்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும், கொரோனா வைரஸ், கோவிட்-19 நோயின் தாக்கத்தை எதிர்த்து உலகமே போராடிக் கொண்டிருக்கிறது. பாதிப்பின் முதல் கட்ட அலை முடிவடைந்து விட்டது. ஆனால், அது முடிந்துவிட்டதாக ஆசுவாசம் அடைய முடியாது. கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை அமெரிக்காவிலும் (america), ஐரோப்பிய நாடுகளிலும் தெரியத் தொடங்கிவிட்டது.
சர்வதேச அளவில் 6,47,97,630 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னுமும் மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத இந்த கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,48,97,428. கொரோனாவின் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,98,102.
கோவிட்-19 நோயால் (COVID-19) பாதிக்கப்பட்ட 1,84,02,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பலதரப்பட்ட மக்களைப் பல்வேறு விதங்களில் பாதிக்கிறது. கொரோனாவால் (coronavirus) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் அவ்வப்போது புதிய வடிவை எடுத்து வருகிறது. முதலில் லேசானது முதல் மிதமானது வரையிலான அறிகுறிகள் இருகலாம் என்றும், பலர் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே குணமடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
பொதுவான அறிகுறிகள்:
- காய்ச்சல்
- வறட்டு இருமல்
- சோர்வு
- அரிதான அறிகுறிகள்:
- தலைவலிகள் மற்றும் உடல் வலிகள்
- தொண்டை வலி
- வயிற்றுப்போக்கு
- கண்களில் வலி
- தலைவலி
- சுவை உணர்வு குறைவது, மணம் அறிய முடியாமல் போவது
Also Read | Good news: Coronavirus Vaccine-க்கு ஒப்புதல், இன்னும் ஒரே வாரத்தில் மக்களை வந்தடையும்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR