Good news: Coronavirus Vaccine-க்கு ஒப்புதல், இன்னும் ஒரே வாரத்தில் மக்களை வந்தடையும்

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவை Pfizer வரவேற்றுள்ளது. COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு வரலாற்று முகியத்துவம் வாய்ந்த தருணமாகும் என Pfizer கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2020, 03:32 PM IST
  • Pfizer-BioTech-ன் கொரோனா தடுப்பு மருந்துக்கு கிடைத்தது ஒப்புதல்.
  • அடுத்த வார துவக்கத்தில் மருந்து மக்களை அடையும்.
  • Pfizer-BioTech அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தது.
Good news: Coronavirus Vaccine-க்கு ஒப்புதல், இன்னும் ஒரே வாரத்தில் மக்களை வந்தடையும் title=

கொரொனா தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உலக மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஒரு நாட்டில், இன்னும் சில நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்படவுள்ளது.

ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், புதன்கிழமையன்று, மேற்கத்திய நாடுகளில், Pfizer-BioTech கோவிட் தடுப்பு மருந்தின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடானது யுனைடெட் கிங்டம் (United Kingdom).

இந்த தடுப்பு மருந்து பொது பயன்பாட்டிற்கு அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.

"Pfizer-BioTech-ன் கோவிட் -19 தடுப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல் அளிக்க சுயாதீன மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது" என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. "இந்த கொரோனா தடுப்பு மருந்து (Corona Vaccine) அடுத்த வாரம் முதல் இங்கிலாந்து முழுவதும் கிடைக்கும்” என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தடுப்பு மருந்து கமிட்டி முன்னுரிமை குழுக்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது முதலில் Pfizer தடுப்பூசியை யார் பெறுவார்கள் என்ற பட்டியலை உருவாக்கும். முன்னுரிமை குழுக்களில் காப்பகங்களில் உள்ளவர்கள், சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள், வயதானவர்கள் மற்றும் COVID-19 நோயால் பாதிக்கப்படக் கூடிய அதிக ஆபத்தில் உள்ளவர்கள் ஆகியோரும் உள்ளனர்.

Pfizer-BioTech அதன் தடுப்பு மருந்து சோதனைகளில் 90% செயல்திறனை அறிவித்தது நினைவிருக்கலாம். புதிய மெசஞ்சர் ஆர்.என்.ஏ (mRNA) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்த திட்டம் அடுத்த வார தொடக்கத்தில் தொடங்கும் என்றும், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் தடுப்பு மருந்து வழங்கலை தொடங்க தயாராக உள்ளன என்றும் இங்கிலாந்து சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்தார்.

ALSO READ: Coronavirus Vaccine குறித்து அரசு செய்த மிகப்பெரிய அறிவிப்பு என்ன தெரியுமா

உதவி வந்து கொண்டிருக்கிறது. COVID-19-க்கான தடுப்பு மருந்தாக Pfizer-BioTech-ஐ MHRA முறையாக அங்கீகரித்துள்ளது. அடுத்த வார துவக்கத்தில் தடுப்பு மருந்துகளை மக்களுக்கு வழங்க NHS தயாராக உள்ளது. விநியோகத்திற்காக மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்தைப் பெற்ற உலகின் முதல் நாடு இங்கிலாந்து” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இந்த முடிவை Pfizer வரவேற்றுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு பிடிட்டிஷ் அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது, COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்று முகியத்துவம் வாய்ந்த தருணமாகும் என Pfizer கூறியுள்ளது.

"விஞ்ஞானம் வெல்லும் என்று நாம் முதலில் அறிவித்ததிலிருந்து நாங்கள் மேற்கொண்டுள்ள ஒரு குறிக்கோளாகும் இந்த அங்கீகாரம். மேலும் கவனமாக மதிப்பீட்டை நடத்தியதற்கும், இங்கிலாந்து மக்களைப் பாதுகாக்க உதவ சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் MHRA-வின் திறனை நாங்கள் பாராட்டுகிறோம்" என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பௌர்லா கூறினார்.

ALSO READ: கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையக்கூடும்: புதிய ஆய்வு..!

"மேலதிக அங்கீகாரங்களையும் ஒப்புதல்களையும் நாங்கள் எதிர்பார்க்கும் அதே வேளையில், உலகெங்கிலும் உயர்தர தடுப்பு மருந்தை பாதுகாப்பாக வழங்குவதற்கான அதே அளவிலான உறுதியுடனும் வேகத்துடனும் முன்னேறுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News