டிரெண்டில் எப்போதும் இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் சுருட்டை முடி ஹேர் ஸ்டைல் தான். சுருட்டை முடி உடையவர்கள் இயற்கையாகவே அழகாக தோற்றம் அளிப்பார்கள்.
சிலர் சுருட்டை முடியை பெருவதற்கு பியூட்டி பார்லர் சென்று, இதை போன்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது.
சுருட்டை முடியை வாருவது சிறிது கடினம் தான். அதுமட்டுமல்லாமல் அதை இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும். இத்தகைய முடியை எப்படி பராமரிப்பது என்று தற்போது பார்ப்போம்
> கண்டிஷனரால் சுருட்டை முடியை சிறிதளவு கட்டுப்படுத்த முடியும். குளித்த பின் இதை போட்டால் சிறந்ததாகும்.
> சுருட்டை முடியை கொண்டவர்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை பயன்படுத்தினால் முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற உதவும்.
> சுருட்டை முடி உள்ளவர்கள் தினமும் எண்ணெய் தடவ வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு விரைவில் முடியானது வறட்சி அடைந்துவிடும்.
> சுருட்டை முடி உள்ளவர்கள், கூந்தலுக்கு அதிகமாக கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்த கூடாது. இதனால் கூந்தல் இன்னும் அதிகப்படியாக வறட்சி அடைவதோடு, கூந்தலின் பொலிவும், தரமும் போய்விடும்.
> சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க இயற்கை பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் போட வேண்டும்.