கஞ்சி சாப்பிட்டால் சர்க்கரை நோய்யாளிகளின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?

குளிரூட்டப்பட்ட சாதம், உருளைக்கிழங்கு போன்ற மாவுசத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 2, 2022, 06:16 AM IST
  • மாவுசத்து நிறைந்த பொருட்கள் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகிறது.
  • ஆனால் இதனை சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
  • தனை சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
கஞ்சி சாப்பிட்டால் சர்க்கரை நோய்யாளிகளின் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? title=

பொதுவாக அரிசி, உருளைக்கிழங்கு போன்று அதிக மாவுசத்து நிறைந்த பொருட்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும், அவ்வாறு அதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் என்றும் நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வருகிறது.  ஆனால் தற்போதைய ஆய்வின்படி, அரிசி, உருளைக்கிழங்கு போன்று அதிக மாவுசத்து நிறைந்த உணவுகளை உண்ணுவது சர்க்கரை நோயாளிகள் நல்லது என்று கூறப்படுகிறது.  இது கொஞ்சம் ஆச்சர்யமானதாக இருக்கும் ஆனாலும் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, அதை எப்படி சாப்பிட வேண்டுமென்றால் சமைத்த அரிசையை நாள் முழுவதும் குளிரூட்டி அதனை மறுநாள் சாப்பிடுவது நல்லது என்று கூறப்பட்டுள்ளது, சாதத்தை அவ்வாறு குளிரூட்டும்போது அது எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச்சாக மாறிவிடுகிறது, இதனை சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பளபளக்கும் தோலை கெடுக்கும் உணவுகள் இவை; இளமை பராமரிக்க தவிர்த்துவிடுங்கள் 

சமைத்து குளிரூட்டப்பட்டு மறுநாள் சாப்பிடும் சாதம், உருளைக்கிழங்கு போன்ற மாவுசத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  இந்த செயல்முறையில் உள்ள சாதத்தை நாம் சாப்பிடும்போது டைப் 1 நீரிழிவு நோயாளிகளில் உணவு உண்டபின் ரத்த குளுக்கோஸின் அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், சமைத்த அரிசியை ஒரு நாள் முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து அதனை மறுநாள் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்று கூறியுள்ளனர்.  குளிர்விக்கப்படும்போது மாவுசத்தானது ஸ்டார்ச் ரெட்ரோகிரேடேஷன் எனும் நிலையை அடைகிறது, இனிதான் மூலம் எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச் உருவாகிறது.

24 மணி நேர குளிர்வூட்டலுக்கு பிறகு மாவுசத்து ஜீரணிக்கக்கூடிய வகையில் மாறுகிறது, இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.  இதனை ப்ரீபயாடிக் என்று அழைக்கின்றனர், இது நமது உடலின் ரத்தத்தில் எந்த விதத்திலும் சர்க்கரையின் அளவை உயர்த்தாது மற்றும் அதேசமயம் நமது குடலிலுள்ள நுண்ணுயிரிகளுக்கு இது உணவும் அளிக்கிறது.

மேலும் படிக்க | Neem Bad Side: அமிர்தமே நஞ்சாகும்: இது வேப்பிலை சொல்லும் தத்துவம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News