அருக்கன் alias ஆள்மிரட்டி alias எருக்க இலைகளின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

எருக்கன் செடியை பார்க்காதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். எங்கும் சுலபமாக வளரும் எருக்கன் இலைக்குக் அருக்கன், ஆள்மிரட்டி என்று பெர்யர்களும் உண்டு.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2021, 07:03 AM IST
  • விஷ முறிவுக்கு சிறந்தது எருக்கம் இலை
  • இறைவழிபாட்டிலும் எருக்கம் இலைக்கு சிறப்பிடம்
  • மருத்துவ மூலிகையாக கருதப்படுகிறது எருக்கஞ்செடி
அருக்கன் alias ஆள்மிரட்டி alias எருக்க இலைகளின் மருத்துவ குணங்கள் தெரியுமா?   title=

Medicinal Plant: எருக்கன் செடியை பார்க்காதவர்கள் சொற்பமாகவே இருப்பார்கள். எங்கும் சுலபமாக வளரும் எருக்கன் இலைக்குக் அருக்கன், ஆள்மிரட்டி என்று பெர்யர்களும் உண்டு.

பொதுவாக வறண்ட பிரதேசத்திலும் வளரும் எருக்கஞ்செடி, ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும்.

எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும். எருக்கன் செடியின் எந்த பாகத்தை ஒடித்தாலும் பால் போல் வெளிப்படும்.சில துளிகள் வெளிவந்தவுடன் தானே நின்று விடும்.

Also Read | வசந்த பஞ்சமி: இந்த வகையில் சரஸ்வதி பூஜை செய்தால் அறிவாற்றல் அதிகரிக்கும், கலைகள் பெருகும்

வெள்ளை மலர்களை கொடுக்கும் வெள்ளெருக்கு மற்றும் நீல நிற எருக்கஞ்ச்செடி எல்லா இடங்களிலும் வளரக்கூடியவை. எருக்கன் இலை விஷ முறிவாக பயன்படுத்தப்படும். எருக்கன் இலையை சாப்பிடக் கொடுத்தால் வாந்தி உண்டாகும், பித்தம் பெருகும், வீக்கம், கட்டிகளை கரைக்கும். 

எருக்கம் இலையை அரைத்து பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும். தேள் கடிக்கு அருமருந்து எருக்கன் இலை. எருக்கன் இலையின் சாற்றை தேனில் கலந்து உண்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

எருக்கன் செடியின் இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால், மார்புச் சளி வெளியேறும். ஆஸ்துமா மற்றும் இருமலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் எருக்க இலைக்கு உண்டு. 

எருக்கம் இலையில் இருந்து வெளியேறும் பால் சுடும் தன்மை கொண்டது. எருக்கம் பால் பட்ட இடத்தில் புண் ஏற்படும்.  பழுத்த எருக்கம் இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து கட்டி, அதன் மீது ஒத்தடம் கொடுத்து வந்தால், குதிகால் வீக்கம் குறையும்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 பிப்ரவரி 17ஆம் நாள், மாசி 05, புதன்கிழமை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News