நீங்க ‘இந்த’ தேதியில் பிறந்திருந்தால் 30 வயதுக்குள் கோடீஸ்வரர் ஆவீர்கள்! நியூமராலஜி கணிப்பு..

Numerology Astrology Predictions : நம் நியூமராலஜி படி, குறிப்பிட்ட 3 தேதிகளில் பிறந்தவர்களுக்கு 30 வயதுக்குள் கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்குமாம். அவை என்ன தேதிகள் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Dec 19, 2024, 03:14 PM IST
  • எண் கணித ஜோதிடம்..
  • இந்த தேதியில் பிறந்தவர்கள் கோடீஸ்வரர் ஆகலாம்..
  • எந்த தேதிகள் தெரியுமா?
நீங்க ‘இந்த’ தேதியில் பிறந்திருந்தால் 30 வயதுக்குள் கோடீஸ்வரர் ஆவீர்கள்! நியூமராலஜி கணிப்பு.. title=

Numerology Astrology Predictions : இந்தியாவை பொறுத்தவரை, பல லட்சம் பேர் ராசி பலன், கிரகப்பலன்கள் ஆகியவற்றில் நம்பிக்கை இருப்பவர்களாக இருக்கின்றனர். ஜோதிட கணிப்புகளில் ஒரு சில முறை உண்மையாகலாம், ஒரு சில முறை கணித்ததை விட அதிகமாகவே நடக்கலாம். இதைப்போலவே வருங்காலத்தை கணிக்க முற்படுகிறது, நியூமராலஜி. ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த நேரம் மற்றும் நட்சத்திரத்தை வைத்து பலன்கள் கணிக்கப்படும். ஆனால், நியூமராலஜியில், ஒருவர் பிறந்திருக்கும் தேதி எண்ணை வைத்து பலன்கள் கணிக்கப்படுகிறது. எண்களை வைத்து, அவற்றிற்கும் அந்த எண்களுடன் தொடர்புடையவர்களுக்கும் எந்த மாதிரியான பலனகள் கிடைக்கும் என்பதை கணிப்பதுதான் நியூமராலஜி. 

இதில் எண் கணிதமும், பிறப்பு எண்ணும் ஒரே அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதன்படி, சில குறிப்பிட்ட எண்களில் பிறந்தவக்ரள், அவர்கள் வாழ்வில் உச்சத்தை தொடுவார்கள் என கணிக்கப்படுகிறது. முக்கியமாக சொல்லப்போனால் 30ல் இருந்து 40 வயது வரை இருப்பவர்கள் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்களாம். 

5ஆம் எண் பலன்கள்: 

இவர்கள், வாழ்வில் மிகவும் தைரியமானவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாம். தன்னை நோக்கி சிறிய வகை சவால் வந்தாலும், பெரிய வகை சவால் வந்தாலும் அதை ஏற்று பயப்படாமல் எதிர்த்து போராடுவார்களாம். அது மட்டுமல்ல, தங்கள் வாழ்வில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை பாசிடிவாக எடுத்துக்கொள்வார்களாம். அதே போல, 30 வருடங்களுக்குள்ளாகவே அவர்கள் வாழ்வில் பெரிய வெற்றியை அடைய வாய்ப்புள்ளதாம். இவர்கள் வாழ்வின் முதல் பாதி கொஞ்சம் எளிமையாகவும், அடுத்த பாதி ஆடம்பரம் நிறைந்ததாகவும் இருக்குமாம். 

Astrology

5ஆம் தேதி பிறந்தவர்கள்: 

5ஆம் எண்ணில் பிறந்தவர்களாக இருந்தால், எண் கணிதத்தின் படி இவர்கள் அதிர்ஷ்டம் பெற்றவர்களாக இருப்பார்களாம். 5 என்ற எண், வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதற்கான எண்ணாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி இந்த எண்ணில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்களாம். இந்த உழைப்பினால் இவர்கள் 30 வயதுக்கு பிறகு நல்ல பலன் கிடைத்து, சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு செல்வார்களாம். ஆரம்ப காலங்கள் கடினமானதாக இருந்தாலும், அதற்கு பிந்தைய காலம் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் நல்ல காலமாக இருக்குமாம். 

14ஆம் தேதி பிறந்தவர்கள்: 

14ஆம் தேதியில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளை பெற்றவர்களாகவும் இருப்பார்களாம். 14 எண்ணின் கூட்டுத்தொகை 5 என்பதால், அந்த எண்ணிற்கான பலன்கள் இவர்களுக்கும் பொருந்துமாம். இவர்களுக்கு 30 வயதுக்கு பின்னர் நிதி நிலை உயருவதோடு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கும் தயாராகின்றனராம். மேலும், எதற்கும் பயப்படாமல் இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். 

23ஆம் தேதி பிறந்தவர்கள்:

எண் கணிதத்தின்படி, 23ஆம் தேதி எண்ணில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்வில் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்களுக்கு இளம் வயதிலேயே அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்குமாம். யார் என்ன தடுத்தாலும், இவர்களுக்கு வரும் அதிர்ஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாதாம். பணம், பொருள் என்று மட்டும் இல்லாமல் நல்ல மனிதர்களை பெருவதற்கான வாய்ப்புகளையும் இவர்கள் பெருவார்களாம். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News