பானி பூரிஉயன் பூர்வீகம் வட இந்தியா தான். ஆனாலும், தமிழகத்தில் பலராலும் தவிர்க்க முடியாத நொறுக்குத்தீனி பானி பூரியாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த மொரு மொரு ஸ்நாக்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
தமிழகத்தில் முட்டுச்சந்தில் கூட குட்டி வண்டியில் பானிபூரி வியாபாரம் படுஜோராக நடந்துகொண்டு இருக்க இதை பற்றி வாட்ஸ் அப்பில் பல தகவல்கள் வந்தாலும் அதை நாம் கவனிப்பதே இல்லை. ஆனால் அதை பற்றிய உணமையான தகவல் தெரிந்தால் பானி பூரி பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
நம் அன்றாட நொறுக்குத்தீனிகளில் ஒன்றாகிவிட்டது பானி பூரி. குழந்தைகளையும் இளம் வயதினரையும் அதன் சுவைக்கு அடிமையாக்கும் நோக்கத்தில் அதில் பான் மசாலா கலக்கப்படுகிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா?.
நான் சொல்லி தெரியனும் என்று அவசியம் இல்லை. நீங்கள் சாப்பிடும் பொது கவனித்து பாருங்கள் பானிபூரியில் பான் மசாலா வாசனை வருவது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
பானி பூரி சாப்பிடுவதால் ஏற்படும் பிரட்சினைகள்...!
பானி பூரிக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருள்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதா மற்றும் பேக்கிங் சோடா போன்றவைதான் அதிகம். நாம் இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன், சர்க்கரைநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகழ் அதிகம்.
> பானி பூரியை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரே எந்த அளவுக்குச் சுத்தமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?.
> கடைக்காரர் அந்த பூரியைப் தங்கள் கை விரல்களால் உடைத்து அதற்குள் மசாலாவை வைத்து பானியில் முக்கித் தருகிறார்கள். அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும் கையில் உள்ள அழுக்கும் பானியிலும் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.
> சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் அதைச் சாப்பிடுவது, வாந்தி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தலாம்.
> இது போன்ற சாலையோரக் கடைகளில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டால் ஹெபடைடிஸ் ஏ தொற்று மற்றும் டைஃபாய்டு காய்ச்சல் போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
பானிபூரியில் பான் மசாலா சேர்ப்பதால் என்ன நடக்கும்...?
> இதுவரை சிகரெட், பீடி, புகையிலை போன்றவற்றுக்கு அடிமையானவர்களைப்போல, 'பானி பூரி அடிக்ஷன்' என்பதற்காக யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை.
> பான் மசாலாவும் ஒருவகைப் புகையிலைப் பொருள்தான் என்பதால், புகையிலை (Tobacco) ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் போன்ற பல பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடும்.