பாடாய் படுத்தும் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் தரும் மேஜிக் பானம்

மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்பட நேரிடலாம். அதலிருந்து விடுபட உதவும் ஓமம் டீ தயாரிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 12, 2022, 05:48 PM IST
பாடாய் படுத்தும் மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் தரும் மேஜிக் பானம் title=

மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்பட நேரிடலாம். அத்தகைய சூழ்நிலையில், ஓமம் மிகவும் பயனளிக்கும். மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஓமம் டீ எப்படின் தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். 

ஓமத்தில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கூட உள்ளே இருப்பதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை இது குறைக்கும்.

ஓமத்தை எவ்வாறு உட்கொண்டால் நிவாரணம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஓமம் டீ எவ்வாறு தயாரிப்பது மற்றும் மாதவிடாய் காலத்தில் டீ குடிப்பதால் என்ன நன்மைகள் என்பதை அறிந்து கொள்ளலாம்..

மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை

மாதவிடாய் காலத்தில் ஓமம் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

ஓமம் டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சோர்வு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். இது தவிர, ஓமம் தேநீரில் வெல்லம் சேர்க்கப்படுகிறது, இதுவும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை நீக்கும். ஓமம் டீயில் நெய்யும் உள்ளது. இதுவும் வலியைப் போக்க பயன்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மாதவிடாய் தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஓமம் டீயை உட்கொண்டு வஃந்தால், நிவாரணம் பெறலாம்.

ஓமம் டீ செய்வது எப்படி

1. முதலில், ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் அரை டீஸ்பூன் ஓமம் சேர்க்கவும்.

2. தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியதும், அதனுடன் சிறிது  டீ சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும்.

3. இப்போது சிறிது வெல்லம் சேர்த்து அதனுடன் நெய் சேர்த்து கலவையை கொதிக்க வைக்கவும்.

4. ஓமம் டீ தயார்.

குறிப்பு - மாதவிடாய் காலத்தில் ஓமம் டீ குடிப்பதால் உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இதனை தவிர்க்கவும். இது தவிர, கோடையில் குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள். ஏனெனில் ஓமம் உடலுக்கு சூட்டை தரக் கூடியது. எனவே, அதனை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடல் நலன் பாதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News