உடல் எடையை குறைக்க அத்தி பழம் சாப்பிடுங்க

எடை இழப்புக்கு அத்திப்பழங்களை உட்கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 04:04 PM IST
  • தினமும் இரண்டு மூன்று அத்திப்பழங்களை சாப்பிடலாம்.
  • அத்திப்பழத்தை உட்கொள்வது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • இதில் கலோரிகள் குறைவு.
உடல் எடையை குறைக்க அத்தி பழம் சாப்பிடுங்க title=

புதுடெல்லி: உடல் எடையை குறைக்க உங்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்றால், ஒரே ஒரு உணவை சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம். அது அத்திப்பழம் ஆகும். இந்த பழம் உங்களுக்கு பல வழிகளில் பயனளிக்கும். எடை இழப்பு முதல் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும். புரதம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அதே சமயம், இதில் உள்ள கொழுப்பின் அளவும் குறைவாக உள்ளது.

அடிக்கடி சோர்வாக உணர்ந்தால் அத்திப்பழம் சாப்பிடுங்கள்
நீங்கள் அடிக்கடி சோர்வாக (Weekness) உணர்ந்தால், அத்திப்பழங்களை உட்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அத்திப்பழத்தில் இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளது, இது உடலுக்கு நன்மை பயக்கும். அத்திப்பழத்தை பாலில் கொதிக்க வைத்து காலையில் சாப்பிடுங்கள். அத்திப்பழத்தை ஒரு பழமாகவோ அல்லது டிரை ஃப்ரூட் ஆகவோ உண்ணலாம்.

ALSO READ | அருகில் நெருங்கினாலே உயிர்பலி கேட்கும் கொலைகார மரம்

எடை இழப்புக்கு உதவும்
அத்திப்பழத்தை உட்கொள்வது எடை இழப்புக்கு (Weight Loss) பயனுள்ளதாக இருக்கும். அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைத்து, சரியான நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்கிறது. அதே சமயம், இதில் உள்ள கலோரிகளின் அளவு குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. 

எந்த அளவில் சாப்பிட வேண்டும்?
தினமும் இரண்டு மூன்று அத்திப்பழங்களை சாப்பிடலாம். நீங்கள் டிரை ஃப்ரூட் அத்திப்பழங்களை உட்கொண்டால், இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அதன் சத்துக்கள் உடலில் எளிதில் கிடைக்கக்கூடும். டிரை ஃப்ரூட் அத்திப்பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம். மறுபுறம், உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை, இரத்தம் தொடர்பான பிரச்சினைகள், கல்லீரல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அத்திப்பழத்தை அதிக அளவில் சாப்பிட வேண்டாம்.

ALSO READ | காலிஃபிளவர் சாப்பிட்டா இந்த பிரச்சனை வருமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News