உடலின் நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்; தயாரிப்பது எப்படி

உடலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்க,  நச்சுக்களை நீக்கும் மேஜிக் பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடனடி பலன் கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 4, 2022, 06:44 PM IST
  • ஆரோக்கியமான உணவுகளில், சில குறிப்பிட்ட நச்சு நீக்கும் பானங்களும் அடங்கும்.
  • டலில் உள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் அவ்வப்போது நீக்குவது மிக முக்கியமானது.
  • காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
உடலின் நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்; தயாரிப்பது எப்படி  title=

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், உங்கள் உடலில் பல வகையான அழுக்குகளும் நச்சுக்களும் சேரத் தொடங்குகின்றன. இதனால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இது நமது உடலை மட்டும் பாதிக்காமல் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன், வயிற்றுப் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இதில் அடங்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு உடலில் உள்ள நச்சுக்களையும் அழுக்குகளையும் அவ்வப்போது நீக்குவது மிகவும் முக்கியமானது. 

உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, நச்சுக்களை நீக்க, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த ஆரோக்கியமான உணவுகளில்,  சில குறிப்பிட்ட நச்சு நீக்கும் பானங்களும் அடங்கும். நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க் மூலம் நீங்கள் உடலின் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்குவதோடு,  எடையையும் குறைக்கலாம். இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த பானம்

இலவங்கப்பட்டை மற்றும் தேன் பானம் உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பானம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், இலவங்கபட்டையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உடலின் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகின்றன. அதே நேரத்தில், தேனில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த, இரண்டின் கலவையும் உங்கள் உடலில் அற்புதமாக வேலை செய்து  நச்சுக்களை நீக்கும். 

இதனை தயாரிக்க கொதிக்கும் தண்ணீரில் இலவங்க பட்டையை போட்டு, சிறிது நேரம் கழித்து அதில் தேன் சேர்த்து அருந்த வேண்டும். 

மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்

புதினா மற்றும் வெள்ளரி பானம்

புதினா மற்றும் வெள்ளரிக்காய் பானம் உங்கள் உடலில் சேரும் அழுக்குகளையும், நச்சுக்களையும் சுத்தம் செய்கிறது. உண்மையில் வெள்ளரிக்காயில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இது உங்கள் உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறது. புதினா இலைகளில் பல வகையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. பொதுவாக, இந்த பானம் உங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. புதினா நன்றாக நறுக்கி வெதுவெதுபான் தண்ணீரில் சேர்க்கவும், அதில் துருவிய வெள்ளரிக்காயையும் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து வடிக்கட்டி குடிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்கை தயாரித்து, காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News