" முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96.6 சதவீதம் அளவிற்கு உயிரிழப்பை தடுப்பதாக ஒன்றிய நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினர் வி.கே. பால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரியஆயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசிசெலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா2 ஆவது அலையின் போது அதிக உயிரிழப்புகள் நேரிட்டன. பெரும்பாலும் தடுப்பூசிபோடாதவர்களே உயிரிழந்தனர்.முதல் தவணை கொரோனா தடுப்பூசி96.6 சதவீதம் அளவுக்கும் இரு தவணைதடுப்பூசி 97.5 சதவீதம் அளவுக்கும் உயிரிழப்பை தடுக்கிறது. இது ஆய்வுகளின்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ALSO READ : கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்! 51 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து கிடையாது. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.உத்தரப்பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள்குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பள்ளி மாணவ,மாணவியருக்குதடுப்பூசிபோட்ட பிறகே பள்ளிகளை திறக்கவேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. எனினும்ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர்தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 58 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 18 சதவீதம் பேர்2 தவணை தடுப்பூசியையும் போட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ALSO READ : Corona effect on Children: கொரோனா குழந்தைகளின் நுரையீரலை சேதப்படுத்துமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR