அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம்.
தொப்பையை குறைக்க இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.
* சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.
* வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
* சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும்.
* உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாகும்.
* உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல் அதனை குறைப்பதோடு செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும்.