ஒற்றைத்தலைவலியை போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!

ஒற்றைத்தலைவலி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மரபியல் காரணங்கள், பருவநிலை மாற்றம், அதிக நெடியுள்ள வாசனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்புக் குறைவது என ஒற்றைத்தலைவலிக்கான பட்டியலில் காரணங்களும் அதிகம்.

Updated: Jan 12, 2020, 02:37 PM IST
ஒற்றைத்தலைவலியை போக்க உதவும் 10 இயற்கை வழிமுறைகள்!
Follow these simple ways to treat migraine!

ஒற்றைத்தலைவலி வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மரபியல் காரணங்கள், பருவநிலை மாற்றம், அதிக நெடியுள்ள வாசனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்புக் குறைவது என ஒற்றைத்தலைவலிக்கான பட்டியலில் காரணங்களும் அதிகம்.

ஒற்றைத்தலைவலிக்கு இதுதான் காரணம் எனக் குறிப்பிட்டும் சொல்ல முடியாது. `இதைக் குறைக்க மாத்திரை, மருந்துகள் இருந்தாலும், சில உணவு முறைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் சரிசெய்ய முடியும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடலில் தொற்றுநோய் அல்லது காயங்களால் ஏற்படும் கட்டிகள், வீக்கம் போன்றவையும் ஒற்றைத்தலைவலி ஏற்பட காரணமாக உள்ளன. ஒமேகா 3 ஃபேட்டி அமிலங்கள் (Omega-3 fatty acid) இதற்கு துணைபுரிகின்றன. இந்த விதை உணவை எண்ணெயாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடலாம்.

இஞ்சி, தலைவலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. நாள்பட்ட வீக்கம், வலி போன்றவற்றால் ஏற்படும் தலைவலியைப் போக்கும் ஆன்டி-இன்ஃப்ளாமேட்டரியை (Anti-inflammatory) கொண்டுள்ளது. 

புராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக உள்ளதால், இதைச் சமைத்து சாப்பிட்டுவந்தால், தலைவலி குறையும்.

மீன் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இவற்றைச் சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3, ஒற்றைத்தலைவலியைக் குணப்படுத்தும்.

பெண்களுக்கு மாதாவிடாய் காலத்தில் ஏற்படும் இந்தத் தலைவலிக்கு மிகச்சிறந்த நிவாரணி கீரை உணவுகள்.

தேனில் பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை நிறைவாக உள்ளன. இவை, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே, தூங்கச் செல்வதற்கு முன்னதாகவோ, உணவு உண்பதுக்கு முன்னதாகவோ இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சாப்பிடுவது இந்தத் தலைவலியைக் குறைக்க உதவும். 

தலைவலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், அதில் உள்ள `காஃபைன்’ என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும். அல்லது கொத்தமல்லி, சுக்கு, மிளகு சேர்த்த டீ குடிக்கலாம்.

தலையில் நீர்கோர்த்துக்கொள்வதாலும் தலைவலி உண்டாகும். இதுபோன்ற தலைவலிக்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்க்கோவை மாத்திரைகளை வெந்நீருடன் சேர்த்து தலையில் பத்து போட்டுக்கொள்ளலாம்.

இதைத் தவிர்த்து வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால், தலைவலி ஏற்படாமல் தவிர்க்கலாம். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.