இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், மாரடைப்பால் ஏராளமான மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள், எனவே நாமும் இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்க எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறான வாழ்க்கை முறையால், மனிதர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக அவர்கள் பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
நம் நாட்டில், பெரும்பாலானோர் அதிக எண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை எடுத்துக் கொள்கிறார்கள். இது சுவையாக இருக்கலாம், ஆனால் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், சில உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.
இதயத்திற்கு நன்மை பயக்கும் வாதுமை பருப்பு (Walnut)
உலர் பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் வாதுமை பருப்புகளை உட்கொண்டால், அது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு மருந்தை போன்றது என்றால் மிகை இல்லை. இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு, அதை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
இதயத்திற்கு வாதுமை பருப்பு எவ்வாறு நன்மை பயக்கிறது?
வாதுமை பருப்புகள் ஸ்டெரால்கள் மற்றும் தாவர அடிப்படையிலான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகின்றன. மேலும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் லினோலெனிக் அமிலமும் நிறைந்துள்ளது. ரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், முதலில் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, பிறகு மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஒமேகா-3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்களின் தினசரி தேவையை பூர்த்தி செய்வதால், சைவ உணவு உண்பவர்கள் குறிப்பாக வாதுமை பருப்புகளை உட்கொள்வதால் பயனடைகிறார்கள்.
நீரிழிவு நோய்க்கும் பயனுள்ளதாக இருக்கும்
வாதுமை பருப்பில், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு இதில் காணப்படுகின்றன. இதை சாப்பிடுவது மாரடைப்பைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வால்நட்களை அதிகமாக சாப்பிடுவதும் தீங்கு விளைவிக்கும்
வால்நட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதை குறைந்த அளவில் தான் சாப்பிட வேண்டும், பலவீனமானவர்கள் 10-12 துண்டுகள் வால்நட் சாப்பிடலாம், ஆரோக்கியமானவர்கள் 6-7 துண்டுகளை உட்கொள்ளலாம். இதை விட அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.
இதய நோய் நோயாளிகள் 2 முதல் 4 துண்டுகள் மட்டுமே வால்நட் சாப்பிட வேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிட்டால், கலோரிகள் அதிகரித்து, நன்மைக்கு பதிலாக தீமை ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR