ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினம் ஒரு கொய்யாப்பழம்! ஆப்பிளை விட அதிக சத்துள்ள கொய்யா

Guava For Health: விலை அதிகமான ஆப்பிளை விட விலை மலிவான கொய்யாப்பழத்தில் அதிக சத்துகள் உள்ளன. தினம் ஒரு கொய்யா, உங்கள் ஆரோக்கியத்தை அட்டகாசமாக மேம்படுத்தும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2022, 11:32 AM IST
  • ஆப்பிளை விட கொய்யாப்பழத்தில் அதிக சத்துகள் உள்ளன
  • கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்
  • கொய்யாவின் ஊட்டச்சத்து நன்மைகள்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினம் ஒரு கொய்யாப்பழம்! ஆப்பிளை விட அதிக சத்துள்ள கொய்யா title=

கொய்யா ஒரு பருவகால பழமாகும். காயாகவும், பழுத்த பிறகும் கொய்யாவை சாப்பிடலாம். சதைப்பற்றுள்ளதாகவும், மென்மையாகவும், பழுத்தவுடன் மிகவும் இனிப்பாகவும் இருக்கும் இந்தப் பழத்தில் நூற்றுக்கணக்கான சிறிய விதைகள் இருந்தபோதிலும், இந்த பழத்தை அதன் தனித்துவமான சுவைக்காக அனைவரும் அனுபவிக்கிறார்கள். இந்த அதிசய பழத்தின் சில அற்புதமான நன்மைகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள். கொய்யாப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன,

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கொய்யாப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதில் உள்ள வைட்டமின் சி, இயற்கையான ஆண்டிஹிஸ்டமைன் ஆகும், இது அழற்சி செயல்பாட்டின் போது வெளியிடப்படும் ஹிஸ்டமின்கள் எனப்படும் மூலக்கூறுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் சுவாச ஒவ்வாமைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மூளைக்கு நல்லது
நல்ல மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான அனைத்து வைட்டமின்களும் கொய்யாவில் காணப்படுகின்றன. அவற்றில் வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் பி 6 உள்ளன, இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
 
ஹார்மோன் தரத்தை மேம்படுத்துகிறது
கொய்யாவில் உள்ள தாமிரம், ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்குத் தேவையான முக்கியமான கனிமமாகும். இது உங்கள் தைராய்டு சுரப்பி சிறப்பாக செயல்பட உதவுகிறது.

Health Alert: ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்திடம் இருந்து விலகியே இருங்க..!!

புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது

கொய்யாவில் லைகோபீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உயிரணுக்களுக்கு ஏற்படும் நேரடி சேதத்தைத் தடுக்கிறது. இதிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், புற்றுநோயைத் தடுக்கிறது.
 
சர்க்கரை நோய்க்கு நல்லது

கொய்யாவில் உள்ள நார்ச்சத்து மற்றும் மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக மாற்றுகிறது.  இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த இந்த இரண்டு பண்புகளும் தேவை.
 
சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது
கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது, இதனால் நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள். முதுமை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு நிச்சயமானது, தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது குறைந்த பட்சம் செயல்முறையை நீட்டிக்கும்.  

மேலும் படிக்க | உங்களுக்கு Low Blood Pressure இருந்தால் இந்த 4 பொருட்களை உடனடியாக சாப்பிடுங்கள் 

மலச்சிக்கலுக்கு தீர்வு
உணவில் நார்ச்சத்து இல்லாததால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. நார்ச்சத்து பெருங்குடலை சீராக்கி, குடல் இயக்கத்தை எளிதாக்கும் பண்பு கொண்டது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் கொய்யாவும் ஒன்று.
 
கண்களுக்கு நல்லது
கேரட்டைப் போல வைட்டமின் ஏ சத்து நிறைந்ததாக இல்லாவிட்டாலும், கொய்யாப்பழத்தில் உள்ள விட்டமின் ஏ, தினசரி தேவைப்படும் விட்டமின் ஏ-வை கொடுக்கிறது. கண்களை நல்ல நிலையில் வைத்திருக்கவும் குறைந்தபட்சம் இது உதவும். 

கரு வளர்ச்சிக்கு உதவுகிறது
கொய்யாப்பழத்தில் ஊல்லா ஃபோலிக் அமிலம் அல்லது வைட்டமின் பி-9, குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கொய்யாவை சாப்பிடுவதால், பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பால் மூலமாக அந்த ஊட்டச்சத்தை பெறும்.அதோடு, புதிதாகப் பிறந்த சிசுக்களை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்க கொய்யா உதவுகிறது. 

கொய்யாப்பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்துவதற்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? பீரின் பக்கவிளைவுகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News