Headache Relief: கோடையில் தலைவலி பாடாய் படுத்துதா, நிவாரணம் பெற டிப்ஸ் இதோ

Headache Relief Tricks: கோடை காலத்தில் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? நிவாரணம் பெற எளிய டிப்ஸ் இதோ!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2022, 04:01 PM IST
  • பெரும்பாலானோர் கோடை காலத்தில் தலைவலி பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
  • இந்த காலத்தில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.
  • கோடையில் ஏற்படும் தலைவலியை இந்த வழிகளில் போக்கலாம்.
Headache Relief: கோடையில் தலைவலி பாடாய் படுத்துதா, நிவாரணம் பெற டிப்ஸ் இதோ title=

தலைவலி நிவாரணம்: கோடை வந்தால், அதன் பின்னால் தலைவலியும் வந்துவிடும். பெரும்பாலானோர் கோடை காலத்தில் தலைவலி பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த காலத்தில் தலைவலி ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. 

சில சமயம் சில நோய்களின் காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. அதே சமயம் மன அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் தலைவலி வரலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் தலைவலி ஏற்படும்போது இதற்கான மருந்துகளை உட்கொள்வதால் பல வகையான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆகையால், தலைவலியின் போது மருந்துகளை உட்கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். கோடையில் ஏற்படும் தலைவலியை போக்க சில வழிகளைப் பற்றி இங்கே காணலாம். 

கோடையில் ஏற்படும் தலைவலியை இந்த வழிகளில் போக்கலாம்.

இஞ்சி தேநீர்:

இஞ்சியில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இரண்டிற்கும் காரணமாகும். இந்த எண்ணெயில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் ஆகிய இரசாயன கலவைகள் உள்ளன. தலைவலியை நீக்கும் தனிமங்களும் இஞ்சியில் காணப்படுகின்றன. இஞ்சி தேநீர் செய்ய, இஞ்சியை நன்றாக நசுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி குடிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க | Belly Fat: வெங்காயத்தை இந்த முறையில் சாப்பிட்டால் தொப்பை கரையும்

எசன்ஷியல் ஆயில் கொண்டு மசாஜ் செய்யவும்:

எசன்ஷியல் ஆயில் இலைகள், தண்டுகள், பூக்கள், பட்டை, வேர்கள் மற்றும் பிற தாவர கூறுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது மன அழுத்தத்தை குறைத்து நறுமணத்தின் மூலம் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி போன்ற சில பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் எசன்ஷியல் ஆயில்கள் உதவக்கூடும். 

எனினும், எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்துவதற்கு முன், அதில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், இனிப்பு பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலக்க வேண்டும். ஏனெனில், எசன்ஷியல் ஆயிலை நேரடியாக சருமத்தில் தடவக்கூடாது. அது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்:

மெக்னீசியம் என்பது நமது உடல் சீராக இயங்குவதற்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது எலும்புகளை வலுவாக்குகிறது. உடலில் மெக்னீசியம் குறைபாடு ஏற்படுவதால், பசியின்மை, குமட்டல், சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கலாம். மெக்னீசியம் குறைபாடு தலைவலியுடன் ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் ஓரு வெள்ளரிக்காய் சாப்பிட்டா முடி அபரிமிதமா வளருமாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News