உங்கள் மனைவியுடன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இணைந்திருப்பது தான் திருமண வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது. ஆனால் உங்கள் திருமண வாழ்க்கையை சில நோய்கள் குலைத்து விடும். எனவே, சாதாரண உடல் நல பிரச்சனை தானே என அலட்சியம் வேண்டாம்.
திருமண வாழ்க்கையை பாதிக்கும் நோய்கள்
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோய் எப்படி மணவாழ்க்கையை பாதிக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். சிலருக்கு இந்த விஷயம் ஆச்சர்யத்தையும் கொடுக்கக் கூடும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவிற்கும் பாலியல் ஆர்ரோக்கியத்திற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு.
இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தபடாமல் தொடர்ந்து அதிக அளவில் இருந்தால், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படும். இது உங்கள் பாலின உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பாதிக்கபப்டலாம். அதோடு, முன்கூட்டிய விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். பெண்களுக்கு உடல் உறவில் விருப்பமின்மை, பிறப்புறுப்பில் வறட்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
பிறப்புறுப்பில் வறட்சி இருந்தால், உடலுறவின் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியம் காரணமாக உடல் உறவில் நாட்டம் இல்லாமல் போகலாம். எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
இருதய நோய்
இதயம் தொடர்பான ஏதேனும் நோய் கரணமாகவும் இரத்த நாளங்களையும் சேதப்படுத்தும். இதுவும் பாலியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், இது தவிர உயர் இரத்த அழுத்தத்திற்கான சில மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாகவும் பாலியல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, உறவில் ஈடுபடுவதில் தயக்கமும், பயமும் இருக்கும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் இருக்கும். எனவே மருத்துவரிடம் இது குறித்து வெளிப்படையாக பேசி, அவரது ஆலோசனையை பெற வேண்டும்.
மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்
மன அழுத்தம்
மன அழுத்தம் இருந்தலும், தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டம் இருக்காது.
மனதில் உற்சாகம் இல்லை என்றால், வாழ்க்கையில் எதுவுமே ரசிக்காது. இது விரக்தியின் அறிகுறி. உங்களுக்கு மனச்சோர்வு, மன ழுத்தம் இருந்தால், அதைப் பற்றி மன நல ஆலோசகரிடம் பேசுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR