சோற்று கற்றாழை என்று சொல்லப்படும் ஆலுவேரா (Aloe Vera) ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடியது. கற்றாழையின் மருத்துவ குணங்களும் அழகு சார்ந்த பராமரிப்புகளும் மிகவும் சிறந்தவை என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் சருமம், கூந்தல் போன்றவற்றையும் இளமையாக பராமரிக்க உதவுகிறது.
ஆலுவேரா பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக மிகவும் பிரபலமாகும். ஜூசி தாவரமான இதில் உள்ள ஜெல் போன்ற பொருள் நீரிழிவு முதல் சரும பிரச்சனை வரை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தரும். ஒரு சிறிய கிளாஸ் கற்றாழை சாறு பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் (Health Tips) என்ன, அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கற்றாழை சாற்றின் நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கற்றாழை
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன என்றாலும், உணவுப்பழக்கங்கள் மற்றும் இயற்கையான சில வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்த முயற்சிப்பது நல்லது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது ஆலுவேரா . நீரிழிவு நோயாளிகள் கற்றாழை சாறு குடிப்பதால் இன்சுலின் சுரப்பு சீராகும். இதன் மூலம் உயர் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை சாறு சிறந்த தேர்வாக இருக்கும்.
சரும பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் கற்றாழை
சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கொண்ட கற்றாழை சரும பிரச்சனைகளுக்குகு இயற்கையான தீர்வை அளிக்கிறது. இது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கின்றன. சரும சுருக்கங்களை போக்குகின்றன. சரும எரிச்சல், வீக்கம் மற்றும் சருமம் தொடர்பான பிற பிரச்சனைகளையும் குறைக்கிறது.
செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஆலுவேரா
கற்றாழை சாற்றில் உள்ள நொதிகள் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
உடல் பருமனை குறைக்க உதவும் ஆலுவேரா
கற்றாழை சாறு வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்கவும் உதவும். உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் ஆற்றல் கொண்ட கற்றாழை பசியைக் குறைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் கற்றாழை
கற்றாழை சாறு ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள நிலையில், உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. கற்றாழை சாற்றை தொடர்ந்து குடிப்பதன் மூலம், சளி, இருமல் மற்றும் பிற நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.தலைமுடி
தலைமுடியை வலுவாக்கும் கற்றாழை
கற்றாழை சாறு தலைமுடிக்கும் மிகவும் நன்மை பயக்கும். தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் பராமரிக்க உதவுகிறது. அலோ வேரா சாறு பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையை போக்க உதவுகிறது
கற்றாழை சாறு உட்கொள்ளும் சரியான முறை
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கற்றாழை சாறு குடிக்கலாம். மற்ற சாறுகளுடன் கலந்தும் குடிக்கலாம். உடல்நலப் பிரச்சினை ஏதேனும் இருந்தால் கற்றாழை சாற்றை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் வெள்ளரியும் வில்லனாகும்: வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ