நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று, சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரல் ஆகும். நமது உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. பல உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. ஆனால், மாசுபாடு, புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் நுரையீரலில் நச்சுக்களும் அழுக்குகளும் சேர்ந்து, சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
நுரையீரலை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். பலர் தங்கள் நுரையீரல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், நுரையீரலை டீடாக்ஸ் செய்ய, அதில் உள்ள நச்சுக்களையும், அழுக்குகளையும் நீக்கும் இயற்கையான வழி பற்றி பலருக்கு தெரியாமல் உள்ளது.
சில பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் நுரையீரலை சுத்தம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அதில் சேர்ந்திருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் அகற்றவும் உதவும் சில வீட்டு வைத்தியங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் எளிய வீட்டு வைத்தியம்
துளசி மற்றும் இஞ்சி
துளசி மற்றும் இஞ்சி இரண்டும் இயற்கையாகவே சுவாச அமைப்புக்கு நன்மை பயக்கும். துளசியில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி உடலில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. துளசி மற்றும் இஞ்சி கலவை நுரையீரலில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவுகிறது. சில துளசி இலைகளைகளியும், புதிய இஞ்சி துண்டுகளையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
சூடான தண்ணீர் மற்றும் தேன்
வெந்நீர் மற்றும் தேன் கலந்த கலவை நுரையீரலை சுத்தம் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேனில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. வெந்நீர் உடலை சுத்தப்படுத்துவதுடன் தொண்டையில் தேங்கியிருக்கும் சளியையும் அழிக்கிறது. ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
நீராவி எடுத்துக் கொள்ளுதல்
நீராவி சுவாசக் குழாய்களை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், நுரையீரலுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீராவி எடுத்துக்கொள்வது நுரையீரலில் சேரும் அழுக்கு மற்றும் சளியை அகற்ற உதவுகிறது. இது சுவாச மண்டலத்தை சுத்தம் செய்து சுவாசத்தை எளிதாக்குகிறது. தலையை ஒரு சிறிய துண்டு அல்லது சால்வையால் மூடிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் வெந்நீரில் இருந்து வரும் நீராவியை 5-10 நிமிடங்கள் அதை உள்ளிழுக்கவும்.
நுரையீரலை டீடாக்ஸ் செய்ய உதவும் பழக்கங்கள்
1. ஆரோக்கியமான உணவு: உங்கள் உணவில் முடிந்தவரை பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும். பச்சை இலை காய்கறிகள், கேரட் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்கள் நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
2. புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்: நீங்கள் புகைபிடித்தால், அதை விட்டுவிட முயற்சி செய்யுங்கள். புகைபிடிப்பதால் நுரையீரலில் சேரும் அழுக்குகள் அதிகமாகும்.
3. உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சி, குறிப்பாக யோகா மற்றும் பிராணாயாமம், நுரையீரலை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ