Asafoetida: புற்றுநோய் முதல்... குடல் ஆரோக்கியம் வரை.... அசத்தும் பெருங்காயம்!

Medicinal properties of Asafoetida: தென்னிந்திய சமையலில் இன்றியமையாத பொருளாக விளங்கும் பெருங்காயம் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. வீட்டு வைத்தியத்தில் பெருங்காயம், செரிமான கோளாறு தொடர்பான பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 7, 2024, 12:51 AM IST
  • மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே முக்கிய இடம் உண்டு.
  • பெருங்காயத்தின் மருத்துவ பலன்கள்.
  • பெருங்காயம் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை.
Asafoetida: புற்றுநோய் முதல்... குடல் ஆரோக்கியம் வரை.... அசத்தும் பெருங்காயம்!

பெருங்காயத்தை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடு இந்தியா. ஆனால் பெருங்காயம் இந்தியாவில் விளைவிக்கப்படுவதில்லை. காரணம் இங்குள்ள தட்பவெட்பநிலை. பெருங்காயம் விளைவிக்கும் சூழல் இந்தியாவில் இல்லாததால், நாம் பயன்படுத்தும் பெருங்காயத்தில் சுமார் 90 %, ஈரான், ஆப்கானிஸ்தான், துர்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் பல காலங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு, தற்போது இமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் பெருங்காய செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

Add Zee News as a Preferred Source

பெருங்காயத்தின் மருத்துவ பலன்கள்

தென்னிந்திய சமையலில் இன்றியமையாத பொருளாக விளங்கும் பெருங்காயம் எண்ணற்ற மருத்துவ பலன்களை (Health Tips) கொண்டுள்ளது. வீட்டு வைத்தியத்தில் பெருங்காயம், செரிமான கோளாறு தொடர்பான பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. வாயு வயிறு உப்பிசம் என, வீட்டில் உள்ள பெரியவர்கள் பல வகைகளில் பெருங்காயத்தை பயன்படுத்துவார்கள்.

குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பெருங்காயம்

மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே முக்கிய இடம் உண்டு. இதற்கு முக்கிய காரணம், சேர்க்கப்படும் உணவில் அது கொடுக்கும் வித்தியாசமான மனம் மற்றும் சுவை. ஆயுர்வேதத்தில் பெருங்காயம் ஒரு மலமிளக்கியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் வயிற்றில் வீக்கம், வலி, குடல் புண் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தாலே, செரிமான பிரச்சனைகள் பலவும் சரியாகும். வயிற்றில் உள்ள என்சைம்களின் செயல்பாடுகளை பெருங்காயம் ஊக்குவிப்பதால் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகிறது.

மன அழுத்தத்தை போக்கும் பெருங்காயம்

பெருங்காயத்திற்கு மன அழுத்தத்தை போக்கும் ஆற்றல் உள்ளதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்தினால் ஏற்படும், கருவுறாமை பிரச்சனை, தூக்கமின்மை பிரச்சனை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக பெருங்காயம் உள்ளது. மேலும் உடலில் ஏற்படும் பதற்றம் உடல் நடுக்கம் ஆகியவற்றை குறைக்கும் ஆற்றல் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | மனக்குழப்பம் பதற்றம் அதிகம் இருக்கிறதா... ‘இந்த’ குறைபாடு காரணமாக இருக்கலாம்..!!

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் பெருங்காயம்

பெருங்காயத்தில் ரோஜஸ்டி ரூம் என்னும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் உள்ளதால், மாதவிடாய் மற்றும் அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் தீரும். ஒரு கப் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து குடித்து வந்தால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஆண்மை குறைவு பிரச்சனையை தீர்க்கும் பெருங்காயம்

பெண்களின் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கும் பெருங்காயம், ஆண்களின் ஆண்மை குறைவு பிரச்சனையையும் தீர்க்கிறது நன்கு வறுக்கப்பட்ட பெருங்காயத்தை, தேனுடன் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைவு பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோயை தடுக்கும் பெருங்காயம்

புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் சக்தி பெருங்காயத்திற்கு இருக்கிறது. பல்வேறு ஆய்வுகளில், நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கும் ஆற்றல் பெருங்காயத்திற்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

கல்லீரல் ஆரோக்கியம்

கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் பெருங்காயம் சிறந்தது பெருங்காயத்திற்கு, கல்லீரலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கும் சில என்சைங்களின் செயல்பாடுகளை பலவீனம் ஆக்குவதன் மூலம் கல்லீரலை பாதுகாக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வயசானாலும் மூளை சூப்பராக செயல்பட... தேவையான உணவுகளும் - பயிற்சிகளும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News