கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது இந்த நாட்களில் பலருக்கு உள்ள பிரச்சனையாக இருந்து வருகிறது. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், முதலில் உங்கள் உணவில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது பலருக்குத் தெரிவதில்லை. கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், சிலவற்றை சாப்பிடுவது மிகவும் தீங்கு விளைவிக்கும். இதற்கான மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். சில அன்றாட உணவுப் பழக்கங்கள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.
இந்த விஷயங்களை கவனித்துக் கொள்ளுங்கள்
1. கொழுப்பு நிறைந்த இறைச்சிகளைத் தவிர்க்கவும்
இறைச்சி புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், சில இறைச்சியில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு (சேசுரேடட் ஃபேட்) உள்ளது. அதிக அளவில் இதை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கிறது.
2. இனிப்பான பொருட்களை குறைவாக உண்ணுங்கள்
இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்த்த பொருட்களை சாப்பிடுவதால், உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலும் குறைந்து கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை சாப்பிடுவதற்கு பதிலாக இனிப்பு பழங்களை சாப்பிடுங்கள்.
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!
3. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
உணவில் நிறைவுற்ற கொழுப்பைக் குறைத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். இது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். உங்கள் எடை தொடர்ந்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தால், அது இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
4. இந்த விஷயங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பீன்ஸ், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு கரையக்கூடிய நார்ச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
5. ஆரோக்கியமான ஃபேட் தேவை
உணவில் நிறைவுற்ற கொழுப்பை எடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் உங்கள் தினசரி உணவில் மற்ற ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கவும். உணவில் உலர் பழங்கள், நட்ஸ், வெண்ணெய் மற்றும் விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
6. காய்கறிகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
உணவில் அதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.
மேலும் படிக்க | பகல் தூக்கம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR