சிறிய வெங்காயம் சாப்பிட்டால் கொரோனா-வில் இருந்து தப்பிக்கலாமா?

சிறிய வெங்காயத்தை சாப்பிடுவது கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க உதவும் என்று தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார். 

Last Updated : Feb 2, 2020, 04:39 PM IST
சிறிய வெங்காயம் சாப்பிட்டால் கொரோனா-வில் இருந்து தப்பிக்கலாமா? title=

சிறிய வெங்காயத்தை சாப்பிடுவது கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க உதவும் என்று தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார். 

ஹோட்டல் உரிமையாளர் இதற்காக தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் அவர் தனது ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சிறிய வெங்காய உணவை வழங்கத் தொடங்கியுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை, இந்த கொடிய வைரஸின் அறிகுறிகள் கேரளாவில் இரண்டு பேரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் சீனாவின் வுஹானில் படித்துக்கொண்டிருந்தார், மற்றவர் சில காரணங்களால் சீனாவுக்குச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நோய் சீனாவில் ஒரு தொற்றுநோயின் வடிவத்தை எடுத்துள்ளது, இதில் இதுவரை முன்னூறுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மேலும் உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசரநிலையை வைரஸ் பரவும் அபாயத்தால் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, உலகம் முழுவதும் பீதியின் சூழ்நிலை உள்ளது. இதற்கிடையில், இந்த ஆபத்தான வைரஸைத் தவிர்ப்பதற்கான பொதுவான வழி நம் வீடுகளில் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் காரைகுடியில் ஒரு ஹோட்டலை நடத்தி வரும் இவர், நம் உணவில் சிறிய வெங்காயத்தைப் பயன்படுத்தினால், இந்த ஆபத்தான வைரஸை நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸில் இருந்து பாதுக்காத்துகொள்வது எப்படி?

  • கைகளை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக, சோப்புடன் கைகளை நன்கு சுத்தம் செய்யுங்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டவுடன். ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்தகரிப்பான் பயன்படுத்தப்படலாம்.
  • சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சரியான தூரத்தை கடைப்பிடியுங்கள்.
  • முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக மூல அல்லது அறைகுறையாக சமைத்த இறைச்சியை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • இருமல் மற்றும் சளி விளக்கும் போது மூக்கு மற்றும் வாயை கைக்குட்டை அல்லது திசு காகிதத்தால் மூடி வைக்கவும்.
  • காட்டு விலங்குகளுடன் பழகுவதை தவிர்க்கவும்.

Trending News