கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழி

How to Check Adulteration in Ice Cream: ஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 9, 2024, 07:02 PM IST
  • ஐஸ்கிரீமில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய எளிதான வழி.
  • ஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது?
  • ஐஸ்கிரீமில் இரசாயனங்கள் முதல் பல்வேறு வகையான கெட்ட கொழுப்புளை கலப்படம் செய்யலாம்.
கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழி title=

How to Check Adulteration in Ice Cream: கோடை காலம் என்றால் குளிர்ச்சியான சர்பத், ஜூஸ் மற்றும் ஐஸ்கிரீம்  ஆகியவற்றின் டிமாண் எகிறி விடும். இதில் ஐஸ்கிரீமுக்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் எத்தனை முறை கொடுத்தாலும் வேண்டாம் என்ற சொல்லாமல் சாப்பிடுவார்கள். ஆனால் ஐஸ்கிரீமில் கலப்படம் என்பது ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷத்தை போன்றது. ஆம், இதனை நாங்கள் கூறவில்லை. ஆனால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India - FSSAI) மற்றும் தேசிய சுகாதார நிறுவனம் (National Institute of Health) ஆகியவற்றின் அறிக்கைகள் கூறுகின்றன. 

ஐஸ்கிரீமில் பிடோமைன் (Ptomaine) மற்றும் டைரோடாக்ஸிகான் (Tyrotoxicon) போன்ற இரசாயனங்களால் கலப்படம் செய்யப்படலாம் என மேலே குறிப்பிட்ட உணவு தர நிர்ணய அமைப்புகள் கூறுகின்றன. இது தவிர, வேறு பல விஷயங்களும் இதில் கலக்கப்படலாம். எனவே ஐஸ்கிரீமில் என்ன விதமான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது என்பதையும், அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் தெரிந்து கொள்வதால் பல ஆபத்துக்களை தடுக்கலாம்.

ஐஸ்கிரீமில் என்ன வகையான பொருட்கள் கலப்படம் செய்யப்படுகிறது?

கீழே குறிப்பிட்டுள்ள வகையில், ஐஸ்கிரீமில் இரசாயனங்கள் முதல் பல்வேறு வகையான கெட்ட கொழுப்புகள் மற்றும் சிரப்கள் வரை கலப்படம் செய்யலாம். 

1. ஐஸ்கிரீமை கெட்டியாகவும் இனிப்பாகவும் தயாரிக்க கார்ன் சிரப், பிரக்டோஸ் கார்ன் சிரப் மற்றும் குளுக்கோஸ் சிரப் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. ஐஸ்கிரீமில் கொழுப்பாகவும் நுரையாகவும் தோன்றுவதற்கு சோப்பு அல்லது சலவை பவுடர்  அதில் கலப்படம் செய்யப்படலாம்.

3. ஐஸ்கிரீமின் அளவை அதிகரிக்கவும், கிரீம் அமைப்பைக் கொடுக்கவும், தாவர எண்ணெய் அல்லது டால்டா போன்ற ஆரோக்கியமற்ற ஹைட்ரஜன் நிறைந்த கொழுப்புகளைச் சேர்க்கலாம்.

4. ஐஸ்கிரீம் நீண்ட நேரம் உருகாமல் இருக்கவும்,  நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கவும், ஆரோக்கியமற்ற கம் போன்ற பொருட்களை ஐஸ்கிரீமில் சேர்க்கலாம். 

மேலும் படிக்க | பீர் பிரியர்கள் கவனத்திற்கு... இதய நோய் முதல் புற்று நோய் வரை... எச்சரிக்கையா இருங்க!

எலுமிச்சை கொண்டு சோதனை செய்யும் முறை

ஐஸ்கிரீமில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய எளிதான வழி எலுமிச்சையை பயன்படுத்துவது. நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் எடுத்து அதன் மீது சிறிது எலுமிச்சை சாற்றை பிழியவும். ஐஸ்கிரீமில் நுரை மற்றும் குமிழ்கள் உருவாக ஆரம்பித்தால், அதில் சோப்பு போன்ற ஒன்று கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

FSSAI பரிந்துரைத்துள்ள செயல்முறை

ஐஸ்கிரீமில் கலப்படத்தை தடுக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வீடியோ ஒன்றை தயாரித்து, அதை எப்படி சரிபார்க்கலாம் என்று கூறியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் செய்ய வேண்டியது

1. ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம் எடுத்து அதில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.

2. இப்போது அதில் 3 முதல் 4 சொட்டு HCL (ஹைட்ரோகுளோரிக் அமிலம்) சேர்க்கவும்.

3. இப்போது ஐஸ்கிரீமின் நிறம் மாறத் தொடங்கும். அது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதில் மெட்டானில் மஞ்சள் (Metanil Yellow) கலப்படம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியும் போது இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கத் தொடங்குகிறது.

மேலும் படிக்க | உடல் முழுக்க வியர்க்குருவா... ஊசி குத்துவது போல் வலிக்கிறதா... அதை சரிசெய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News