நோயில்லா வாழ்க்கை வேண்டுமா? ஊட்டச்சத்து மிக்க கொத்தமல்லி உப்பு இருக்கே!

Enhance Corionder properties: உணவின் சுவையை அதிகரிப்பதுடன் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் சிறப்பு உப்பு! வீட்டிலேயே தயாரிக்கும் உப்பின் மகத்துவம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2023, 02:08 PM IST
  • கொத்தமல்லி உப்பின் ஆரோக்கிய நன்மைகள்
  • உப்பின் நன்மைகளை கூட்டிக் கொடுக்கும் கொத்தமல்லி
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உப்பு
நோயில்லா வாழ்க்கை வேண்டுமா? ஊட்டச்சத்து மிக்க கொத்தமல்லி உப்பு இருக்கே! title=

Food For Health: ஆரோக்கியமான உணவு அவசியம் என்றாலும், நமது மனமும் நாவும் சுவையான உணவுகளை விரும்புகிறது.  ஏனென்றால் வீட்டில் சமைக்கும் உணவு ருசியாக இல்லாவிட்டால், ஆரோக்கியமற்ற உணவுகள் அல்லது வெளியில் வாங்கும் உணவுகள் மீதான ஆர்வம் ஆதிகரிக்கும். எனவே, நமது ஆரோக்கியமான உணவை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்றால் அதைவிட சிறப்பான விஷயம் வேறு எதுவும் இருக்குமா? ஆரோக்கியமான உணவை கூட சுவையாக மாற்றும் உணவுப் பொருட்கள் பல இருந்தாலும், நமது இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களில் கொத்தமல்லிக்கு சிறந்த இடம் உண்டு.

பச்சை கொத்தமல்லி, வரக்கொத்தமல்லி என கொத்தமல்லி பச்சையாகவும், மசாலாவாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கொத்தமல்லி உப்பு பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து வைத்துக் கொண்டு, உப்புக்கு பதில் சேர்த்து வந்தால் உணவின் சுவை கூடுவதுடன், ஊட்டச்சத்து மதிப்பும் அதிகரிக்கும்.

உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் இந்த சிறப்பு உப்பை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | Kidney Detox: சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!

கொத்தமல்லி உப்பு செய்முறை
கொத்தமல்லி உப்பு செய்வது மிகவும் எளிதானது, ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். கல் உப்பு அல்லது கருப்பு உப்பை நன்றாக அரைத்து கொத்தமல்லியில் சேர்க்கவும். மேலும், புதினா, கருப்பு மிளகு மற்றும் பூண்டு ஆகியவற்றை வாணாலியில் எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இவை ஆறிய பிறகு அரைத்து பொடி செய்து கொத்தமல்லிப் பொடியில் சேர்க்கவும். இவை அனைத்தையும் கலந்து சூரிய ஒளியில் நன்கு உலர வைக்கவும். வெயிலில் நன்கு பிறகு, இந்த கொத்தமல்லி உப்பை தினசரி உணவில், அதாவது குழம்பு, காய் போன்ற பதார்த்தங்களில் சேர்த்து வந்தால், ஆரோக்கியம் மேம்படும்.

கொத்தமல்லி உப்பின் ஆரோக்கிய நன்மைகள்

மலச்சிக்கலை நீக்கும்
கொத்தமல்லி உப்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், இது படிப்படியாக உங்களை மலச்சிக்கலில் இருந்து முற்றிலும் நிவாரணம் அளிக்கும், இந்த உப்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல்வேறு பண்புகள் கொத்தமல்லியில் காணப்படுகின்றன, இந்த உப்புடன், கொத்தமல்லி மட்டுமல்ல, பல மசாலாப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த ஸ்பெஷல் உப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தம் வேலையை செய்கிறது. மாறிவரும் பருவத்தில், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும் நிலையில், இந்த சிறப்பு உப்பு நோய் தடுப்பு அரணாக மாறும்.

மேலும் படிக்க | இந்த மாவுகளை பயன்படுத்திப் பாருங்க! கொலஸ்ட்ராலும் சர்க்கரையும் சட்டுன்னு குறையும்

கண்களுக்கு நன்மை பயக்கும்
கொத்தமல்லி உப்பு கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லியில் உள்ள வைட்டமின் ஏ, கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, கண்பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தவிர, இந்த உப்பில் பல வகையான மசாலாப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன, எனவே இதில் உள்ள இயற்கை கூறுகள் மிகவும் நன்மை பயக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்
இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், செரிமான பிரச்சனைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உங்கள் உணவில் கொத்தமல்லி உப்பு போன்ற இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துங்கள். இந்த உப்பில் உள்ள பல சிறப்பு கூறுகள், செரிமான செயல்முறையை விரைவுபடுத்துவதோடு, செரிமானம் தொடர்பான பல நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாத... கருவின் வளர்ச்சியை பாதிக்கும் ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News