குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு வராமல் தடுக்க வழிகள்!

வெண்ணெய், சீஸ், தயிர் மற்றும் பால் போன்ற அதிக கலோரிகள் நிறைந்த பால் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, இதற்கு பதிலாக குழந்தைகளுக்கு மாற்று உணவுகளை கொடுக்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Nov 5, 2022, 05:54 AM IST
  • சர்க்கரை வியாதியை போல கொலஸ்ட்ராலும் பொதுவான பிரச்சனையாக இப்போது மாறிவிட்டது.
  • கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான பொருள் என்றாலும் அதிக கொலஸ்ட்ரால் அனைத்தையும் பாதிக்கிறது.
  • சில மோசமான வாழ்க்கை முறைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கக்கூடும்.
குழந்தைகளுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு வராமல் தடுக்க வழிகள்! title=

இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளால் அனைத்து வயதினரிடையேயும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து காணப்படுகிறது.  சர்க்கரை வியாதியை போல கொலஸ்ட்ராலும் பொதுவான பிரச்சனையாக இப்போது மாறிவிட்டது, அதிக கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டம் முதல் உடல் எடை வரை உடல் முழுவதிலும் பல்வேறு விதமான ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்த காரணமாக இருக்கிறது.  கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான பொருள் என்றாலும்  அதிக கொலஸ்ட்ரால் அனைத்தையும் பாதிக்கிறது. இருப்பினும் அதிக அளவு கொலஸ்ட்ரால் உடலில் இருப்பது ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!

மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது வயதைப் பொறுத்தது அல்ல, இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு கூட இருக்கிறது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.  குழந்தைகளுக்கு மரபியல், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது மற்றும் சில மோசமான வாழ்க்கை முறைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கக்கூடும்.  அதிக கொலஸ்ட்ராலால் ஏற்படும் கடுமையான நோய்களைத் தவிர்க்க குழந்தைகளின் வாழ்க்கை முறையில் பின்வரும் சில மாற்றங்களை செய்யலாம்.

1) அதிக கொழுப்பு நிறைந்த பொருட்களை குழந்தைகளின் உணவில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும், உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் கொழுப்பின் அளவு 30% கலோரிகளுக்கு மேல் இருக்கக்கூடாது.

2) சரியான ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் முக்கியம், இதன் விளைவாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.  முறையான உணவுகளை சாப்பிடும்போது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதோடு, கொலஸ்ட்ரால் அளவும் கட்டுப்படுகிறது.

3) ஜாக்கிங், நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும், இதனை செய்வதால் உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவு குறைந்து கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.

4) வெண்ணெய், சீஸ், தயிர் மற்றும் பால் போன்ற அதிக கலோரிகள் நிறைந்த பால் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, இதற்கு பதிலாக குழந்தைகளுக்கு மாற்று உணவுகளை கொடுக்கலாம்.

5) நல்ல கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் வைத்திருக்க அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் அல்லது உணவுப்பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

மேலும் படிக்க | இந்த 3 வழிகளை பின்பற்றினால் போதும்! உடல் எடையை எளிதில் குறைக்கலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News