Belly Fat Reduction Tips: உடல் பருமனுடன் இருப்பவர்கள், வயிற்றில் தொப்பையையும் வைத்துக்கொண்டு அதை குறைக்க முடியாமல் இருப்பர். வயிற்றில் வளரும் தொப்பை, உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கூட வரும். இதற்கு பின்னால் கொழுப்பு சேருவதும் காரணமாக அமையலாம். உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் சில யோகா ஆசனங்கள் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
தொப்பையை குறைக்கும் யோகாசனங்கள்:
அடிவயிற்றில் உள்ள தொப்பை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். இது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறலாம். வயிற்றில் அதிக கொழுப்பு இருப்பதன் காரணமாக பலருக்கு தொப்பை போடுகிறது. சரியாக தூங்காதது, சரியான உணவு முறை இல்லாதது, சில உடல் நலக்குறைபாடுகள் போன்றவற்றால் உடலில் எடை கூடும் என கூறுகின்றனர் மருத்துவர்கள். அந்த ஆசனங்களை இங்கு பார்ப்போம்.
1.உஸ்த்ராசனா:
இந்த ஆசனத்தை செய்யும் போது உங்கள் கை இடுப்பில் இருக்க வேண்டும். அப்படியே மண்டியிட்டு இருக்க வேண்டும். பின்னர், உங்களது கைகள், பாதங்களில் இருத்தல் வேண்டும். அப்படியே உங்கள் நெஞ்சை நேராக நிமிர்த்தி, மேலே தலையை தூக்க வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் அல்லது வினாடிகளுக்கு மூச்சை இழுத்து விட வேண்டும். இந்த நிலையில் இருந்து எழுந்து கொள்ளும் போது கைகளை மெதுவாக விலக்கி, பின்னர் எழுந்து நிற்க வேண்டும்.
2.ஹாலாசனா:
தரையில் படுத்துக்கொண்ட உங்கள் இரு பக்கங்களிலும் கைகளை நேராக வைத்துகொள்ள வேண்டும். உங்கள் முக்கிய தசைகளை கொண்டு, கால்களை 90 டிகிரிக்களுக்கு தூக்க வேண்டும். பின்னர் உங்களது கைகளை முதுகு பகுதியில் வைக்க வேண்டும். இதே நிலையில் சில நிமிடங்களுக்கு மூச்சை இழுத்து விட வேண்டும். 15 முதல் 20 வினாடிகளுக்கு இந்த நிலையில் இருக்கலாம்.
மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?
3.பாதஹஸ்தாசனா:
நேராக நின்று முதலில் மூச்சு இழுத்து விட வேண்டும். பின்னர், உங்கள் கால்களை ஒன்றாக வைத்து குனிய வேண்டும். நீங்கள் குனிகையில் உங்கள் இடுப்பு பகுதி அழுத்தமாகும் வகையில் குணிய வேண்டும். உங்கள் மூக்கு, கால் முட்டிக்கு நேராக இருக்க வேண்டும். உங்கள் கைகளை கால்களின் இரு பக்கங்களிலும் வைக்க வேண்டும். இது உங்களுக்கு புதிய ஆசனமாக இருந்தால், உங்கள் முட்டியை சிறிதளவு வளைத்துக்கொள்ளலாம்.
4.சந்தோலனாசனா:
சாந்தோலனாசன ஆசனம், செய்வதற்கு எளிதான ஆசனமாக இருக்கும். உங்கள்கைகளை தோள்பட்டைக்கு கீழ் வைத்து குப்புற படுக்க வேண்டும். உங்கள் முட்டிகளையும் இடுப்புகளையும், மேற்பகுதி உடலையும் தூக்க வேண்டும். இதையடுத்து உங்களது கால்விரல்களை தரையில் வைக்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் High Plank என்று குறிப்பிடுவர்.
5.வசிஷ்டாசனா:
வசிஷ்டாசனாவை ஆங்கிலத்தில் Side Plank என்று கூறுவர். பிளாங்க் போஸில் இருந்தவாறு, முதலில் வலது கையை அந்த பக்கமாக தூக்கி சில வினாடிகள் மூச்சு இழுத்து விட வேண்டும். பின்னர் மெதுவாக இடது கையை தூக்கி மூச்சு இழுத்து விட வேண்டும். பின்னர், வலது பக்கத்தால் உங்கள் வலது காலை தொடுவதற்கு முயற்சி செய்யுங்கள், அடுத்து இடது கையால் இடது காலை தொட முயற்சி செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ