Weight Loss Tips: இந்நாட்களில் பலருக்கு உள்ள ஒரு பொதுவான இலக்கு உடல் எடையை குறைப்பதுதான். இதற்கு இந்த காலத்தில் பல வழிகளும் உள்ளன. ஜிம், டயட் என பல வித முயற்சிகளை மேற்கொண்டு மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். எனினும் இவற்றாலும் சில சமயங்களில் அனைவருக்கும் நினைத்த பலன்கள் கிடைப்பதில்லை. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் அல்லது அதிகரித்த எடை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது.
கொய்யா:
கொய்யா இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்படும் ஒரு பழமாகும். கொய்யா ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் காரணமாக இது சூப்பர் உணவு என்று அழைக்கப்படுகிறது. நம் தினசரி உணவில் கொய்யாவை சேர்ப்பது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். கொய்யாவில் மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின்கள், வைட்டமின் சி, தாதுக்கள், லைகோபீன் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. ஆயுர்வேதத்திலும் கொய்யாவின் பல வித ஆரோக்கிய பண்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
கொய்யாவின் ஆரோக்கிய நன்மைகள்
கொய்யாப்பழம் பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. கொய்யாவில் உள்ள பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. கொய்யா எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொய்யாவில் உள்ள அத்தியாவசிய பண்புகள் எடை குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இதற்கு கொய்யாவை சரியான முறையில் உட்கொள்வது அவசியம். தொப்பை கொழுப்பை குறைத்து (Belly Fat) உடல் எடையை குறைக்க கொய்யாவை எப்படி உட்கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
கொய்யாவில் (Guava) கலோரிகளின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அதை உட்கொள்வதால் அதிக கலோரிகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. ஒரு கொய்யாவில் 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது தவிர, கொய்யாவை உட்கொண்ட பிறகு ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. இதன் காரணமாக எடை இழப்புக்கு (Weight Loss) இது ஏற்றாதாக கருதப்படுகின்றது.
உடல் எடை குறைக்க கொய்யாவை இப்படி சாப்பிடலாம்
கொய்யா மற்றும் புதினா சாறு
கொய்யா மற்றும் புதினா சாறு செய்ய, ஒரு மிக்ஸி ஜாரில் 2 கொய்யா, அரை வெள்ளரி, சில புதினா இலைகள், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். அனைத்தையும் சேர்த்து அரைத்து, ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து சாறு தயார் செய்து பருகவும்.
கொய்யா சட்னி
கொய்யா சட்னி தயார் செய்ய, 250 கிராம் கொய்யாவை பொடியாக நறுக்கவும். இப்போது 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கொத்தமல்லி இலைகள், 2 பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கு உப்பு ஏற்ப சேர்க்கவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்போது உங்கள் சட்னி பரிமாற தயாராகிவிடும்.
கொய்யா ஸ்மூத்தி
கொய்யா ஸ்மூத்தி குடிப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதற்கு 2 கொய்யாப்பழம் மற்றும் 4 ஸ்ட்ராபெர்ரிகளை மிக்ஸி ஜாரில் போடவும். இதனுடன், அதில் 2 ஸ்பூன் தேன் மற்றும் 1 கப் பால் சேர்த்து அரைக்கவும். அரைத்து, ஸ்மூத்தி தயார் செய்து உட்கொள்ளுங்கள்.
கொய்யாவின் சில முக்கிய அம்சங்கள்
- கொய்யாவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது.
- இதை முழுமையாக ஜீரணிக்க நேரம் எடுக்கும்.
- இதனால் அடிக்கடி பசியும் எடுக்காது.
- இதன் காரணமாக நாம் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவு வகைகளை அவ்வப்போது உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது.
- கொய்யாவில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க இது உதவுகிறது.
- கொய்யாவை சாப்பிடும்போது அதை தோலுடனேயே சாப்பிடுவது நல்லது.
- ஏனெனில் செரிமானத்திற்கு தேவையான அத்தியாவசிய பண்புகள் அதன் தோல்களில் காணப்படுகின்றன.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க..‘இந்த’ 7 யோகாசனங்களை செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ