Dengue: பிளேட்லெட் எண்ணிக்கை, காய்ச்சல், உடல் வலி... அத்தனைக்கும் ஒரே இலையில் தீர்வு

Papaya Leaf For Dengue Treatment: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு பிளேட்லெட் பற்றாக்குறைதான். பிளேட்லெட் குறைந்தவர்கள் அதை அதிகரிக்க பல இயற்கையான வழிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று பப்பாளி இலை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 16, 2024, 02:37 PM IST
  • பப்பாளி இலைகள் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகின்றன.
  • பப்பாளி இலையில் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன.
  • பப்பாளி இலையில் காய்ச்சலைக் குறைக்கும் ஆன்டி-பைரெடிக் பண்புகள் உள்ளன.
Dengue: பிளேட்லெட் எண்ணிக்கை, காய்ச்சல், உடல் வலி... அத்தனைக்கும் ஒரே இலையில் தீர்வு title=

Papaya Leaf For Dengue Treatment: நாட்டின் பல பகுதிகளில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலம் பெரும்பாலும் பலருக்கு பிடித்தமான ஒரு பருவமாக இருக்கின்றது, எனினும், இந்த காலத்தில் பல தொற்றுகளும், நோய்களும் பரவவும் சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளன. ஆகையால் பொது சுகாதாரத்தில் இந்த காலத்தில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். 

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில், டெங்கு பாதிப்பும் அதிகமாகின்றது. இந்த ஆண்டும் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகின்றது. பல மாநிலங்களில் டெங்குவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. டெங்கு ஒரு ஆபத்தான நோயாகும், இது வேகமாக பரவுவதோடு சில சமயங்களில் இது உயிருக்கே ஆபத்தாகவும் அமைகின்றது. 

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு பிளேட்லெட் பற்றாக்குறைதான். எனினும், பிளேட்லெட் குறைந்தவர்கள் அதை அதிகரிக்க பல இயற்கையான வழிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று பப்பாளி இலை. பப்பாளி இலை கொண்டு பிளேட்லெட்டுகளை (Blood Platelet) எப்படி அதிகரிப்பது என இந்த பதிவில் காணலாம். 

பப்பாளி இலைகள் 

பப்பாளி இலைகள் (Papaya Leaves) உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், டெங்கு காய்ச்சல் சிகிச்சையிலும் ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது. பப்பாளி இலைகளால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி இங்கே விரிவாக காணலாம். 

பிளேட்லெட்டுகளை அதிகரிக்கின்றன

பப்பாளி இலைகளில் 'பப்பைன்' என்ற நொதி உள்ளது. இது பிளேட்லெட்டுகளின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டால், அவரது பிளேட்லெட்டுகள் குறைகின்றன. இதனால் உடல் பலவீனமடைகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் பிளேட்லெட் குறைபாடு ஏற்படும்போது பப்பாளி இலைகளை உட்கொள்வது பிளேட்லெட் எண்ணிக்கையை (Platelet Count) அதிகரிக்க உதவும். 

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்

பப்பாளி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. பப்பாளி இலை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. டெங்கு பாதிப்பில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. இதன் காரணமாக நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும் பப்பாளி இலைகளை உட்கொள்வது நிவாரணம் அளிக்கும்.

மேலும் படிக்க | கண்களுக்கு கீழ் இருக்கும் கரு வளையத்தை நீக்க..‘இந்த’ 7 பழங்களை சாப்பிடுங்க!

காய்ச்சலைக் குறைக்கிறது

பப்பாளி இலையில் காய்ச்சலைக் (Fever) குறைக்கும் ஆன்டி-பைரெடிக் பண்புகள் உள்ளன. டெங்குவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக காய்ச்சல் ஏற்படுவது இயல்பானது. ஆகையால், இந்த நேரத்தில் பப்பாளி இலைகளை (Papaya Leaves) உட்கொள்வது காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.

வலியைக் குறைக்கிறது

டெங்கு காய்ச்சலில் அதிக அளவில் உடல் வலி இருக்கும். உடல் வலி மற்றும் மூட்டு வலி ஆகியவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாகும். பப்பாளி இலையில் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக இதனை உட்கொள்வது உடல் வலி (Body Pain) மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது மிகப்பெரிய வலி நிவாரணியாக செயல்படுகிறது. 

பப்பாளி இலைகள் பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகின்றன. எவ்வளவு வேகமாக இது அதிகரிக்கும் என்பது நோயாளியைப் பொறுத்தது. எனினும், பப்பாளி இலைகளை உட்கொள்வதால், 24 மணி நேரத்திற்குள் பிளேட்லெட் எண்ணிக்கையில் சீரான மற்றும் விரைவான அதிகரிப்பு ஏற்படும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

பப்பாளி இலைகளை உட்கொள்வது எப்படி?

1. பப்பாளி இலை சாறு

பப்பாளி இலைகளை சாப்பிடுவதற்கான எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள வழி சாறாக குடிப்பதாகும்.  இதை செய்ய 2-3 பப்பாளி இலைகளை நன்கு சுத்தம் செய்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, சுவைக்கேற்ப எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். 

2. பப்பாளி இலை டீ 

பப்பாளி இலைகள் கொண்டு தேநீர் தயாரிக்கலாம். இதற்கு, 2-3 இலைகளை கொதிக்க வைத்து, பின்னர் அதை வடிகட்டி, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.

கவனத்தில் கொள்ளவும்

- பப்பாளி இலைகளை கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் சாப்பிடக்கூடாது. 

- ஏதேனும் ஒவ்வாமை அல்லது பிற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், பப்பாளி இலைகளை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மிரட்டும் யூரிக் அமிலம், படுத்தும் மூட்டு வலி: சுலபமா சரி செய்ய இந்த இலைகள் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News