Hug Day 2024: கட்டிப்படி வைத்தியம் செய்தால் ‘இந்த’ நோயில் இருந்து தப்பிக்கலாம்!

Hug Day 2024: உலகம் முழுவதும் Hugs Day கொண்டாடப்படுகிறது. இதை நம் ஊரில் கட்டிப்பிடி வைத்தியம் என்று கூறுவர். இதனால் நமது மன நலனில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Feb 11, 2024, 05:50 PM IST
  • இன்று கட்டிப்பிடிக்கும் தினம்,
  • அன்புக்குரியவர்களை கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.
  • இதனால் நோய் பாதிப்புகள் வராதாம்!
Hug Day 2024: கட்டிப்படி வைத்தியம் செய்தால் ‘இந்த’ நோயில் இருந்து தப்பிக்கலாம்! title=

Hug Day 2024, Health Benefits Of Hugging Your Loved Ones: வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் இருந்து வைரலான வார்த்தை, ‘கட்டிப்பிடி வைத்தியம்’. நமது மனதுக்கு நெருக்கமானவர்களை கட்டிப்பிடிப்பதால் நமது மனநலனில் ஏற்படும் முன்னேற்றத்தினை நம்மால் கண் முன்னே பார்க்க முடியும். உடல் நலனில் எந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொண்டு நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே போல மன நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். 

காதலர் தினம் விரைவில் வரவுள்ளதை ஒட்டி, அதற்கு முன்னதாக ‘ஹக் டே’ என்ற ஒரு தினமும் கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 12ஆம் தேதியான இன்று, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்புக்குரியவர்களை கட்டிப்பிடிப்பதால் நமது உடலுக்குள் உள்ளூர ஆழ்ந்த மகிழ்ச்சி உருவாகும். இது, கட்டிப்பிடிக்கப்படும் இருவருக்கும் உணர்வு ரீதியான பிணைப்பு உருவாகும். கட்டிப்பிடிப்பது, உடல் அளவிலும் நெருக்கத்தை உண்டாக்கும். இது, மன நல ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். அன்புக்குரியவர்களை கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம். 

மன அழுத்தத்தை குறைக்கும்:

ஒருவர் சோகமாகவும், தனிமையாகவும் உணரும் போது அவருக்கு கட்டிப்பிடி வைத்தியம் கொடுப்பது அவரை மிகவும் நன்றாக உணர வைக்கும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, ஒருவரின் தொடுதல் நம்மை நன்றாக உணர வைக்கும் என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். இது, நம் உடலில் உள்ள பாராசிம்பதிடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்தி, நல்ல உணர்வுகளை தூண்டும். 

நோயிலிருந்து பாதுகாக்கிறது:

மன அழுத்தத்தினால் உடலில் பல நோய் பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவரை கட்டிப்பிடிப்பதனால்க் நமக்கு மன ரீதியாக ஏற்படும் நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நமது பக்கம் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு வந்துவிட்டாலே பலர் நோய் பாதிப்புகளில் இருந்து தப்புவர், என கூறப்படுகிறது. 

அசௌகரியத்தை தவிர்க்கும்:

நாள்பட்ட நோய் பாதிப்புகளினால் அவதிப்படுபவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை கட்டிப்பிடிப்பதால் தங்கள் உடலில் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து விடுபடுவதாக கூறப்படுகிறது. மேலும், வாழ்க்கை மீது பிணைப்பு ஏற்படுத்தவும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இது உதவும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | தனியாவின் தனித்துவமான நன்மைகள்: பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு

நம்பிக்கையை வளர்க்கும்:

மனிதர்களை சமூக மிருகம் என கூறுவர். காரணம், நம்மால் சமூக கட்டமைப்பில் அல்லாமல் தனிப்பட்டு மகிழ்ச்சியாக வாழ இயலாது. ஒரு கூட்டத்துடன் வாழ்வதற்கு நமக்கு நம்பிக்கை, அன்பு, பரிவு என அனைத்து உணர்ச்சிகளும் தேவைப்படுகிறது. இந்த உணர்வுகளை கட்டிப்பிடிப்பது அதிகரிக்கும் என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டிப்பிடிப்பது நமக்கு பாதுகாப்பு உணர்வினை கொடுப்பதால், மனதளவில் நம்மை நாமே பலப்படுத்திக்கொள்ளவும் முடியும். 

வலுவான பிணைப்பு:

கட்டிப்பிடிப்பதும் ஒரு வகையான உடல் ரீதியான தொடுதல்தான். இதனால் நம் உட்லைல் உள்ள ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன்கள் வெளியேறும். இது, நாம் கட்டிப்பிடிக்கும் நபரை நம்மிடையே பாதுகாப்பாக உணர வைக்கும். இது, அவர்களுக்குள் நல்ல பிணைப்பையும் ஏற்படுத்தும். 

இருதய ஆரோக்கியத்திற்கு உதவும்:

ஒருவரை கட்டிப்பிடிப்பது அவரது இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. கட்டிப்பிடிப்பது, ரத்த அழுத்தத்தை குரைக்கவும், இதய துடிப்பை சமநிலை படுத்தவும் உதவுகிறது. இந்த கட்டிப்பிடி வைத்தியத்தால் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள் வெளியேறுவதால் மகிழ்ச்சியான மன நிலையும் உண்டாகிறது. இதனால் இதயம் தொடர்பான நோய் பாதிப்புகளில் இருந்து நாம் தள்ளியே இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | தாங்க முடியாத கழுத்து வலியா? ‘இந்த’ யோகாசனங்களை ட்ரை பண்ணி பாருங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News