உடற்பயிற்சி செய்ய டயமே இல்லையா... ‘இந்த’ சூப்பர் பானங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்!

சிலருக்கு உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், வேலையின் நடுவே உடற்பயிற்சியில் கவனம் செலுத்த நேரம் கிடைக்காத நிலை இருக்கலாம். அது போன்றவர்களுக்கு, இந்த 4 வீட்டு வைத்தியம் கை மேல் பலன் தரும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 14, 2023, 12:52 PM IST
  • சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பொதுவாக கூறுவார்கள்.
  • தற்போதையை மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கமே முக்கிய காரணம்.
  • வெந்தயத்தை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
உடற்பயிற்சி செய்ய டயமே இல்லையா... ‘இந்த’ சூப்பர் பானங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்! title=

இன்றைய கால கட்டத்தில், உடல் பருமன் அல்லது தொப்பை கொழுப்பு பிரச்சனை, இடுப்பை சுற்றி சதை போடுதல், போன்றவை பொதுவான பிரச்சனைகளாகி விட்டது. அதற்கு, தற்போதையை மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கமே முக்கிய காரணம். இந்நிலையில், சிலருக்கு உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், வேலையின் நடுவே உடற்பயிற்சியில் கவனம் செலுத்த நேரம் கிடைக்காத நிலை இருக்கலாம். அது போன்றவர்களுக்கு, இந்த 4 வீட்டு வைத்தியம் கை மேல் பலன் தரும்.

உடல் எடையை குறைக்க வீட்டு வைத்தியம்

உடல் எடையை குறைக்கும் வீட்டு வைத்தியம்: உடல் எடை கூடுவது கண்கூடாக தெரியும் ஒரு பிரச்சனை. இந்த உடல் பருமன் உடலில் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதய நோய்கள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகள் தீவிரமடைகின்றன. எடை அதிகரித்த பிறகு, மக்கள் அதைக் குறைக்க வழிகளைத் தேடுகிறார்கள். ஆனால், இது குறைந்த முயற்சியுடன், குறைந்த காலத்தில் எடை குறைய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்நிலையில், எடையை விரைவாகக் குறைக்கும். அத்தகைய சில சூப்பரான பானங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

திரிபலா

சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது திரிபலா சூரணம். ஆயுர்வேதத்தின் இன்றியமையாத கூறுகளான அம்லா என்னும் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூலிகைகளை உள்ளடக்கிய திரிபலா ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். திரிபலாவில், இந்த மூன்றையும் விதைகளிலிருந்து பிரித்தெடுத்து, சம அளவு பொடியாகச் செய்கிறார்கள். இந்த திரிபாலா உடல் எடை குறைக்க மாயங்கள் செய்யக் கூடியது. ஆனால், இதனை மருத்துவ ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெறால், அவர்கள் உங்கள் உடல் நிலைக்கேற்ற சரியான அளவை பரிந்துரைப்பார்கள். திரிபலா சூரணத்தை சிறிதளவு தண்ணீரில் கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, பின்பு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது மிகவும் நன்மை விளைவிக்கும்.

பெருஞ்சீரகம்

சோம்பு (பெருஞ்சீரகம் ) விதைகள் இந்தியாவில் மட்டுமல்லாது, நவீன பிரெஞ்சு மற்றும் இத்தாலிய சமையலிலும் மிகவும் பிரபலமாக பயன்படுத்துகிறது. கால்சியம், வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த, பெருஞ்சீரகம், எடையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதில், அனெத்தோல் என்ற கலவை உள்ளது. 2 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டவும். பின்னர் இந்த பானத்தை சூடாக குடிக்கவும்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

வெந்தயப் பொடி

வெந்தயத்தை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எடை இழப்புக்கு வெந்தயத்தை பல வழிகளில் உட்கொள்ளலாம். வெந்தய விதைகளை பொடி செய்து சாப்பிடலாம். ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் வெந்தயப் பொடியைச் சேர்த்து அருந்தலாம். வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து பின், அதனை தண்ணீரோடு சேர்த்து அருந்தலாம். இதை உடல் பருமனை குறைப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு நோயாளிகளுக்கும், உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும்.

சுக்கு தூள்

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பொதுவாக கூறுவார்கள். சுக்கு அல்லது உலர் இஞ்சி தூள் எடை இழப்புக்கான சிறந்த மருந்தாக செயல்படும். சுக்கு கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது, இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். உலர்ந்த இஞ்சி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் குடிக்கவும். இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, எடை குறைக்க உதவும். மெலும், மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News