Hypertension: உயர் இரத்த அழுத்தம் உங்களை என்ன செய்யும்: கூலாக எதிர்கொண்டால் BP ஜுஜூபி

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மன அழுத்தம் இல்லாத வாழ்வு அவசியம். உயர் ரத்தத்தை கட்டுப்படுத்தும் டிப்ஸ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 14, 2022, 12:50 PM IST
  • ஹைபர்டென்ஷன் கொடுக்கும் டென்ஷன்கள்
  • மன அழுத்தம் இல்லாத வாழ்வு
  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிகள்
Hypertension: உயர் இரத்த அழுத்தம் உங்களை என்ன செய்யும்: கூலாக எதிர்கொண்டால் BP ஜுஜூபி title=

உயர் இரத்த அழுத்தம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். சில கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டாலே, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான எல்லா விஷயங்களையும் தெரிந்துக் கொண்டதற்கு சமம்.

மே 17ம் நாள், உலக உயர் இரத்த அழுத்த தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் உயர் ரத்த அழுத்த பிரச்சனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். இந்த கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொண்டால் ரத்த அழுத்த பிரச்சனையை சரியாக சமாளித்துவிடலாம்.  

உடலில் உள்ள ரத்தம், நமது நாளங்களின் வழியாக இதயத்திற்கு செல்கிறது. இரத்தக் குழாய்களின் மூலமாகச் செயல்படும் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், அதை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் இதயத்தின் வேலை அதிகரிக்கிறது. அதனால், இதயத்தின் வேலையைப் பொறுத்து ரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது.

health

இதய துடிப்புகளுக்கிடையே இதய தசை சுருங்குவது (சிஸ்டோல்) அல்லது தளர்வுறுவது ( டைஸ்டோல் ) என்று கூறப்படுகிறது. இரத்த அழுத்தம் என்பது இதய சுருங்கியக்க அழுத்தம் மற்றும் விரிவியக்க அழுத்தம் என்ற இரண்டு அளவுகளை உள்ளடக்கியது.

ஓய்வு நிலையில், இதய சுருங்கியக்கம் 130/80 mmHg (உயர் அளவீடு ) மற்றும் இதய விரிவியக்கம் 6 0-90 mmHg (கீழ் அளவீடு ) என்ற வரம்புக்குள் இரத்த அழுத்தம் இருக்க வேண்டும்.

தொடர்ந்து இரத்த அழுத்தம் 140/90 mmHg என்ற அளவிற்கு மேல் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் என்று சொல்லலாம். எந்த அளவு அழுத்தத்தில் செல்கிறது என்பது முக்கியமானது. குறிப்பிட்ட அளவு சீரான வேகத்தில் சென்றால் அது பிரச்சனை இல்லை. 

ஆரோக்கியமான வாழ்வுக்கு நமது உடலின் ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.

ஒவ்வொரு ஆண்டும் மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினமாக கொண்டாடப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது ஒரு தீவிர பிரச்சனை. உயர் ரத்த அழுத்தம் என்பதை அமைதியான கொலையாளி (Silent Killer) என்று சொல்வதில் இருந்து இதன் தீவிரத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தால் என்ன செய்வது

ஆனால், உயர் இரத்த அழுத்தத்தைப் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் பெரும்பாலும் தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் உயிர்க்கொல்லியாக கருதப்படும் உயர் ரத்த அழுத்தத்தை அப்படி சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இதயத் தமனிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது ஏற்படுவது ரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்ஷன் என்று அழைக்கப்படுகிறது.

உயர் இரத்த அழுத்த அளவுகள் எவை
130/80 mmhg க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் எனப்படுகிறது.

health

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும். இது உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். அவகேடோ, கீரை சூப், அன்னாசிப்பழம் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.  

உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?

சிறுநீரில் ரத்தம், நெஞ்சு வலி, இதயத் துடிப்பு, தூக்கமின்மை பிரச்சனை, மூக்கில் ரத்தம் வருவது, பதற்றம், தலைவலி, மூச்சுத் திணறல்

உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணம் என்ன?
மன அழுத்தம், சிறுநீரக பிரச்சினைகள், தைராய்டு, எண்ணெய் உணவு அதிகமாக உண்பது, மது, போதை மற்றும் சிகரெட் நுகர்வு அதிகமாக இருப்பது, உடல் பருமன், கோபம், தூக்கமின்மை, அசைவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது
 
உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகள் என்ன?

இதய செயலிழப்பு, இதய நோய் மற்றும் கரோனரி இதய நோய் ஆபத்து

உயர் இரத்த அழுத்தத்தை எவ்வாறு தடுக்கலாம்?
முறையான உடற்பயிற்சி, எடை இழப்பு, சமச்சீரான உணவு, மன அழுத்தமற்ற வாழ்க்கை முறை

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News