கொலஸ்ட்ராலை குறைக்க வீட்டு வைத்தியம்:: கெட்ட கொலஸ்ட்ரால் நமது இதயத்தின் மிகப் பெரிய எதிரிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மெழுகு போன்ற பொருள் தமனிகளில் படிவதால், தமனி உள்ளே இருந்து சுருங்கி ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. ரத்த ஓட்டத்தின் பாதை தடைபடுவதால், இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் போது கூட, எந்த அறிகுறிகளும் சிலருக்கு காண்பிப்பதில்லை. கொலஸ்டிரால் இருப்பது தெரியாமல் இருப்பது என்பது மிகவும் அபாயகரமானது. எனவே, கொல்ஸ்டிரால் அளவு அதிகரிப்பதற்கு முன் அதைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம், ரத்த நாளங்களில் கொழுப்புகளையும் அழுக்குகளையும் சேர்க்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இருப்பினும், முறையான உணவு பழக்க வழக்கங்களின் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம். சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம், தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கலாம். அத்தகைய இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட உலர் திராட்சை உட்கொள்வதன் மூலம் உடலின் தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கலாம்.
உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், இனிப்பு மற்றும் புளிப்பு சுவை நிறைந்த திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க, திராட்சையில் நார்ச்சத்து மட்டுமல்ல, அதிக அளவிலான புற முக்கிய ஊட்டசத்துக்கள் உள்ளன, அவை மிகவும் திறம்பட செயல்பட்டு கொல்ஸ்டிராலை எரிக்கின்றன. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்காலத்தில் குறைந்தது 10 திராட்சைகளையும், கோடையில் குறைந்தது 5 திராட்சைகளையும் தினமும் சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | சருமத்தை பளபளப்பாக்கும் செம்பருத்தி மலர்! பூச்சூடினால் அழகும் ஆரோக்கியம் நிச்சயம்
உலர் திராட்சையை சாப்பிட சரியான வழி
திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவதால், இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்யத் தொடங்குகிறது. நீங்கள் இரவில் அவற்றை உட்கொள்ள விரும்பினால், காலையில் அவற்றை தண்ணீரில் ஊறவைத்து மாலையில் சாப்பிடுங்கள். திராட்சையும் சாதாரணம் தண்ணீரில் மட்டுமே ஊறவைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியமானது
உண்மையில், பல வகையான வீட்டு வைத்தியங்கள் கிடைக்கின்றன, இதன் உதவியுடன் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் அதிக கொலஸ்ட்ரால் பல கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியம், எனவே வீட்டு வைத்தியத்தை மட்டுமே நம்புவதற்கு பதிலாக, ஒரு மருத்துவரை தொடர்ந்து ஆலோசனை செய்ய வேண்டும். மேலும், மருத்துவர் கொடுக்கும் மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளை கவனமாக பின்பற்றவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை தகவலுக்காக மட்டுமே மற்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வீட்டு வைத்தியம் அல்லது சிகிச்சையும் மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்தப்படக்கூடாது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உயிரற்ற நரம்புகளுக்கும் உயிர் கொடுக்கும் ‘மேஜிக்’ மசாலா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ