Healthy liver: கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்

சாப்பிடுவதை செரிமாணம் செய்ய உதவும் கல்லீரல், ஊட்டச்சத்து உட்கொள்ளலை சமநிலைப்படுத்தவும், ரத்தத்தில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும் செயல்படுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2021, 03:56 PM IST
  • கல்லீரல் உணவு செரிமாணத்திற்கு ஆதார உறுப்பு
  • ஊட்டச்சத்து உட்கொள்ளலை சமநிலைப்படுத்தும் கல்லீரல்
  • கல்லீரலை பராமரிக்க உதவும் உணவுகள்
Healthy liver: கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்  title=

உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். இல்லையென்றால் நோயற்ற வாழ்வு வாழ முடியாது. உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்றாகும். 

சாப்பிடுவதை செரிமாணம் செய்ய உதவும் கல்லீரல், ஊட்டச்சத்து உட்கொள்ளலை சமநிலைப்படுத்தவும், குளுக்கோஸை ஆற்றலாக மாற்றவும், ரத்தத்தில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும் செயல்படுகிறது. 

கல்லீரல் செயலிழந்தால் பல நோய்கள் நம்மைத் தாக்கும். அதனால்தான் கல்லீரலின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளில் சில இவைதான். எளிதில் கிடைக்கும் விலை மலிவான இந்த உணவு பொருட்கள் உங்கள் கல்லீரலின் தரத்தை சிறப்பாக பராமரிக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். விட்டமின் சி கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கும். எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. எலுமிச்சையில் உள்ள கூறுகள் கல்லீரல் செல்களின் ஆற்றலை அதிகரிக்கின்றன. செரிமானத்தை ஆதரிக்கும் நொதிகளை கல்லீரலில் உற்பத்தி செய்ய உதவும் எலுமிச்சை, தாதுக்களை உறிஞ்சுவதையும் ஊக்குவிக்கிறது. எலுமிச்சை சாறு குடிப்பது பலவிதங்களில் நன்மை பயக்கும்.

Also Read | தினம் ஒரு வாழைப்பழம், நன்மைகள் என்ன

அதேபோல, வைட்டமின் சி அதிகம் உள்ள பீட்ரூட் பிட்டாவைத் தூண்டுகிறது மற்றும் நொதி செயல்பாட்டை ஊக்குவிக்கிறது பீட்ரூட் ஒரு இயற்கையான ரத்த சுத்திகரிப்பு காய் என்பதால், அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெர்ரி பழத்தில் உள்ள பாலிபினால்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெர்ரி பழங்களில் சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கல்லீரலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன.

திராட்சைப் பழம் கல்லீரலுக்கு மிகவும் நல்லது., கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளை உட்கொள்வது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றுநோயைக் குறைக்க திராட்சை உதவுகிறது. எனவே, திராட்சையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

Also Read | அல்சர்? விடுபட எளிமையான வழிமுறைகள் இதோ

வயிறு சம்பந்தமான செரிமாணக் கோளாறுகளை தீர்க்கும் வாழைப்பழம், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டால், உணவு எளிதில் செரிக்காது. அத்தகைய சூழ்நிலையில், வாழைப்பழத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளலாம்.

கல்லீரல் கோளாறுகளை நீக்குவதில் ஆப்பிள் சாப்பிட்டால் முக்கியமான பங்கு வகிக்கிறது. பெக்டின் சத்தைக் கொண்டுள்ள ஆப்பிள், செரிமான அமைப்பு மற்றும் கொலஸ்ட்ராலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இதனால் கல்லீரலின் வேலை சுலபமாகிறது. ஆப்பிளில் மாலிக் அமிலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.

பசும் இலைகளை கொண்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. கீரை, பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Also Read | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News