மீன்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. ஒரு சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நமது உடல் நலத்திற்கு ஆரோக்கிய மற்றும் நன்மை, தீமைகளை பார்ப்போம்.
1 கானாங்கெளுத்தி மீனில் உயர் ரக மெக்னீசியம் உள்ளது. இதய நோய், குடல் புற்றுநோய், மூட்டுவலி, நீரழிவு நோய் இவற்றிற்கு எல்லாம் இந்த மீன் வகை மிக சிறந்தது.
நன்மைகள் : இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், புரோட்டீன் அதிகம் உள்ளன. கொழுப்பு அதிகம் உள்ள மீன்.
தீமைகள் : இதில் அதிகளவு பாதரசம் நம் உடலுக்கு தீய தாக்கத்தை அளிக்கும்.
2 விலாங்கு மீன் ஒரு நீளமான மெல்லிய மீன் வகை. தலை பாம்பை போன்றும் வால் மீனை போன்றும் இருக்கும்.
நன்மைகள் : சுவையானது விரால் மீன் குழம்பிற்கு அருமையான ரெசபி.
தீமைகள் : மஞ்சள், வெள்ளி நிறத்தில் உள்ள விலாங்கு மீனை அதிகளவு சாப்பிட கூடாது, ஏன்னென்றால் அதிகப்படியான பாலிகுளோரினேடட் பைபினைல் மற்றும் பாதரசம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
3 சுறா மீனிலும் பாதரசம் அதிகம் உள்ளது. அதனால் இந்த சுறா மீனை அதிகம் சாப்பிடக் கூடாது. இதனால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.
மீன்கள் உடலுக்கு தீங்கையும், நன்மையும் ஏற்படுத்தும். அத்தகைய மீன்களை உண்பதன் மூலம் நாம்முடைய உடலுக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளும். இதில் எனக்கு தெரிந்தவையில் சிலகுறிப்புகள் இவைகள்.