உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 125 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
மழை காலம் துவங்கியுள்ள நிலையில்., கொசுக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பலிகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 125 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக கடந்த விழாயன் அன்று 82 வயது மூதாட்டி ஒருவருக்கு டெங்கு பரவியிருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
டெங்கு காய்ச்சலுக்கு மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 7 பேர் ஆண்கள் எனவும், இருவர் முறையே 11 மற்றும் 15 வயது சிறுவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர்கள்., கோமதி நகர், ருச்சி காண்ட், ஹஸ்ரத்கஞ்ச், டிக்ரோஹி, பசர்கலா, சலேஹ்நகர், நீல்மதா, இந்திரா நகர், ஷர்தா நகர் மற்றும் ராஜாஜிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, டெங்கு காய்ச்சல் மாநில தலைநகரில் மட்டும் 173 பேரை பாதித்துள்ளது, குறிப்பாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகபட்சமாக வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இன்று வரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த பெருக்கம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்., 70 சதவீதம் குளிரூட்டிகளில்(coolers) குவிந்துள்ள தண்ணீரின் மூலம் டெங்கு பரவியிருப்பதாக தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க மக்கள் வாரந்தோறும் குளிரூட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது மண்ணெண்ணெயினை தண்ணீர் தொட்டியில் ஊற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
"டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளை மக்கள் தவறாகப் புரிந்துகொள்வதால் ஏற்படும் தாமதமும், அதிகளவு டெங்கு காய்ச்சலுக்கான காரணங்களாக அமைகிறது" என பால்ராம்பூர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவிக்கின்றார்.