அச்சச்சோ.. ஆண்களே..‘அந்த’ விஷயத்தில் பிரச்சனையா? சுவையான ஒரு தீர்வு இதோ

Dry Fruits For Male Fertility: திருமணமான ஆண்கள் 3 வகையான உலர் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், அவர்களின் ஆண்மைத்தன்மை மட்டுமன்றி, உடல் வலிமையும் அதிகரிக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2022, 04:50 PM IST
  • அத்திப்பழங்களை உட்கொள்வதால், ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை மேம்படும்.
  • மேலும் இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
  • இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
அச்சச்சோ.. ஆண்களே..‘அந்த’ விஷயத்தில் பிரச்சனையா? சுவையான ஒரு தீர்வு இதோ title=

ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்க உலர் பழங்கள்: திருமணத்திற்குப் பிறகு, ஆண்கள் தங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக பல வித முயற்சிகளையும் செய்கிறார்கள். எனினும், சிலருக்கு விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணு தரம் இரண்டும் மோசமாக இருப்பதால், ஆண்மைத்தன்மை குறைந்து, இதனால் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. பலருக்கு, பல வித முயற்சிகளை செய்தும் தந்தையாகும் கனவு கனவாகவே இருந்து விடுகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கானவர்கள் இந்த பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். 

இந்த விஷயம் மிகவும் தனிப்பட்ட விஷயமாக இருப்பதால், பல ஆண்கள் வெட்கத்தின் காரணமாக இதை யாரிடமும் பகிர்ந்துகொள்வதும் இல்லை. ஆனால், இதற்கு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் ஆண்களின் இந்த பிரச்சனைகளுக்கு பெருமளவில் காரணமாகும். இந்த தவறுகளை சரியான நேரத்தில் சரிசெய்தால், பாலியல் பலவீனம், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, ஆண் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளை சில வாரங்களில் சமாளிக்க முடியும். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' ஜீ நீயீசிடம், திருமணமான ஆண்கள் 3 வகையான உலர் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், அவர்களின் ஆண்மைத்தன்மை மட்டுமன்றி, உடல் வலிமையும் அதிகரிக்கும் என்று கூறினார்.

இந்த 3 உலர் பழங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன:

1. திராட்சை

திராட்சையை உலர்த்தி உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கும் மிகவும் நன்மை பயக்கும். வெயிலில் உலர்த்தப்படுவதால், எலக்ட்ரோலைட்டுகள், ஆண்டி ஆக்சிடெண்டுகள், தாதுக்கள், ஆற்றல் மற்றும் வைட்டமின்கள் இந்த உலர் பழத்தில் செறிவூட்டப்படுகின்றன. 

மேலும் படிக்க | Health Tips: 2022 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட வீட்டு வைத்தியங்கள் 

திராட்சையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விந்தணுக்களின் இயக்கத்தையும் அதிகரிக்கிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் இதை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

2. அத்திப்பழம்

அத்திப்பழங்களை உலர்த்தி உலர் பழங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உட்கொள்வதால், ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்கி ஆண்மை மேம்படும். மேலும் இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில்  பாந்தோதெனிக் அமிலம், தாமிரம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் B6 ஆகியவை உள்ளன. அத்திப்பழத்தை சிற்றுண்டியாகச் சாப்பிடுவதன் மூலம் பலன் சில நாட்களில் தெரியும்.

3. பேரிச்சம்பழம்

ஆண்களின் கருவுறுதலை மேம்படுத்த பல நூற்றாண்டுகளாக பேரிச்சம்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் இனிப்புச் சுவை பலரை கவர்ந்தாலும், அது விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் அதிகரிக்கும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பேரீச்சம்பழத்தில் எஸ்ட்ராடியோல் மற்றும் ஃபிளாவனாய்டுகள் என்ற 3 முக்கியமான கலவைகள் காணப்படுகின்றன. அவை ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது ஆண்களின் பாலியல் ஆசை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சோம்பு கஷாயம்..குளிர்காலத்தில் கட்டியம் கட்டாயம் குடிங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News