Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் செயல்பாடற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நோய் நம்மை ஒரு முறை ஆட்கொண்டு விட்டால், இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. எனினும், உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில கட்டுப்பாடுகளை மெற்கொண்டால், கண்டிப்பாக இதை கட்டுக்குள் வைக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோய் (Diabetes) இருந்தால், நீங்கள் எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற புரிதல் வேண்டும். எந்த உணவுகளில், சர்க்கரை, கார்போஹைட்ரேடுகள் அதியமாக உள்ளன, எதை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) அதிகமாகும் என அனைத்து விஷயங்களையும் தெரிந்துகோள்வது அவசியமாகும். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஜீரோ கலோரி அல்லது குறைந்த கலோரி பானங்களை குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கவும் சில இயற்கை பானங்களை குடிக்கலாம் என்று கூறுகிறார். அந்த பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் இந்த இயற்கை பானங்களை அருந்த வேண்டும்
1. தண்ணீர்
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிக முக்கியம். அதுவும், நீரிழிவு நோயாளிகள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் (Water) அதிகமாக குடிப்பது மிக நல்ல வழியாக பார்க்கப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான குளுக்கோஸை சிறுநீர் மூலம் வெளியேற்றலாம். ஒரு வயது வந்த ஆண் ஒரு நாளைக்கு 13 கப் (3.08 லிட்டர்) தண்ணீரையும், பெண்கள் ஒரு நாளைக்கு 9 கப் (2.13 லிட்டர்) தண்ணீரையும் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
2. கிரீன் டீ
கிரீன் டீ (Green Tea) அனைவரது ஆரோக்கியத்திற்கும் தேவையான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக ஏற்றது. கிரீன் டீயை தினமும் உட்கொள்வதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் இதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த 3 பால் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது!
3. இனிப்பு இல்லாத காபி
காபி (Coffee) குடிப்பது சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது மட்ட்டுமின்றி இது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. எனினும் இதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லையென்றால், நமன்மைக்கு பதில் தீமை ஏற்படக்கூடும்.
4. குறைந்த கொழுப்புள்ள பால்
பாலில் (Milk) முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பால் ஒரு பரிபூரண பானமாக பார்க்கப்படுகின்றது. எனினும், இது உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்கிறது. நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரை இல்லாத மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலை உட்கொள்ள வேண்டும், ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிளாஸ் குறைந்த கொழுப்புள்ள பால் குடிக்கலாம்.
5. எலுமிச்சை சாறு
நாம் நமது வீட்டிலேயே எளிதாக எலுமிச்சை சாறு (Lemon Juice) செய்யலாம். இது உடலுக்கு உடனடி புத்துணர்ச்சியை அளிக்கின்றது. இதில் சர்க்கரையின் அளவு பூஜ்யம் ஆகும். இதில் இஞ்சி சேர்த்து குடிப்பது இன்னும் அதிக நன்மைகளை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ