Herbs to Control Uric Acid: இன்றைய காலகட்டத்தில் யூரிக் அமிலம் பொதுவான ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. முதியவர்களுடன், இளைஞர்களும் இந்த கடுமையான பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர்.
மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக, உடலில் சேரும் பியூரின் என்ற தனிமம் யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, அது எலும்புகளின் மூட்டுகளில் படிந்து, அதில் இடைவெளிகளை உருவாக்குகிறது. இதனால், கால்விரல்கள், முழங்கால்கள், கணுக்கால், மணிக்கட்டுகள் மற்றும் முழங்கைகளின் மூட்டுகளில் மூட்டுகளில் வலியும் வீக்கம் ஏற்படுகிறது.
யூரிக் அமிலத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், நடக்க மட்டுமின்றி உட்காருவதோ, எழுவதோ கூட சிரமமாகிறது. இந்த பிரச்சனை கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கும் வழிவகுக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யூரிக் அமில பிரச்சனையினால், கீல்வாதம், சிறுநீரக கற்கள், மூட்டு வலி அல்லது வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் தவிர்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆயுர்வேத பானங்கள் (Health Tips) உங்களுக்கு உதவும்.
யூரிக் அமிலத்தை குறைக்கும் மூலிகைகள்
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்: யூரிக் அமிலம் உடலில் குறைந்த அளவில் இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படும் ஆனால், யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகும்போது, அது படிகங்களாக மாறத் தொடங்குகிறது மற்றும் விரல்களின் மூட்டுகளில் படிகிறது. இந்நிலையில், உடலில் இருந்து இந்த யூரிக் அமிலத்தை அகற்ற, நீங்கள் சில ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருந்து பொருட்கள் கை கொடுக்கும்.
கடுக்காய்
கடுக்காயில் உடலில் சேருகும் நச்சுக்களை நீக்கும் கூறுகள் உள்ளன. உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்ட கடுக்காய் யூர்க் அமல படிவங்களை கரைத்து வெளியேற்றும். தவிர, இதை உட்கொள்வதால் செரிமானமும் அதிகரிக்கிறது. யூரிக் அமிலத்திலிருந்து நிவாரணம் அளித்து கீல்வாதம் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
வேம்பு
உடலில் இருந்து யூரிக் அமில படிகங்களை அகற்ற, வேப்பிலை என்னும் வேம்பு மிகவும் உதவும். வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்புக் கூறுகளும் வேப்பிலையில் காணப்படுகின்றன. உடலில் சேரும்ம் நச்சுக்களை நீக்கவும் வேம்பு உதவுகிறது.
மேலும் படிக்க | கோடையில் எதை மறந்தாலும் என்னை மட்டும் மறக்காதீங்க: இப்படிக்கு இளநீர்
நெல்லிக்காய்
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆம்லா என்னும் நெல்லிக்காய், யூரிக் அமில படிகங்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் ஏற்படும் அழற்சியைத் தடுப்பதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதில் இது சிறப்பாக செயல்படும்
கிலோய்
சீந்தில் என அழைக்கப்படும் கிலோய் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு கூறுகளை கொண்டுள்ளது. இதனுடன், கிலோய் சிறுநீரக செயல்பாட்டிற்கும் உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுகள் மற்றும் யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதில் சிறந்தது.
கொத்தமல்லி விதை
தனியா அல்லது கொத்தமல்லி விதைகள் யூரிக் அமில படிகங்களை உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தை சிறுநீருடன் வெளியேற்றும் டையூரிடிக் தன்மை கொத்தமல்லியில் உள்ளது. யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்தமல்லி டீ அல்லது டிகாக்ஷன் குடிப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் சுகர் லெவல் வரை... பீர்க்கங்காயை குறைச்சு எடை போடாதீங்க...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ